Saturday, November 28, 2020

 

#It_is_only_a_shadow" (அது ஒரு நிழல் மாத்திரமே) என்கிறார். உடனே ராஜாஜி “#If_there_is_shadow, there is always a substance" (நிழல் என்றிருந்தால் பொருள் இருந்து தான் தீரும் )
————————————————



#ராஜாஜி_சுதந்திரா_கட்சி தொடங்கிய நேரம் #பண்டித_நேரு புதிதக ஆரம்பிக்கப்பட்ட கட்சியைக் குறிப்பிட்டு “It is only a shadow" (அது ஒரு நிழல் மாத்திரமே) என்கிறார். உடனே ராஜாஜி “If there is shadow, there is always a substance" (நிழல் என்றிருந்தால் பொருள் இருந்து தான் தீரும்) என்று எழுதுகிறார். பிற்காலத்தில் இருவரும் எதிரும்புதிருமாக இருந்தார்கள், இருந்தும் பண்டித நேரு மறைந்தபோது நேரு என்னைவிட 11 வயது இளையவர்; இருந்தாலும் பதினொரு நூறு தடவை என்னைவிட அதிகமாக நாட்டுக்கு முக்கியமானவர்; பதினொரு ஆயிரம் தடவை என்னைவிட நாட்டு மக்களால் நேசிக்கப்பட்டவர்.

இப்போது எனது போராட்டத்தில் ஒரு ஒப்பற்ற எதிரியை இழந்து நான் தனி ஆளாகி விட்டேன் என்று அங்கலாய்த்தார். தகுந்தவர், தகுதியானவர், தனக்கு எதிரியாக இல்லையே என்று வருத்தப்பட்டார் ராஜாஜி. அவரை ஆச்சாரியார் என்று அழைக்கத் தோன்றவில்லை. ஆச்சரியார் என்றுதான் அழைக்கத் தோன்றுகிறது.

#ksrpost
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
05.07.2020

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...