Saturday, March 16, 2024

வாழ்க்கை மிகவும் வளமையானதாகும், மிகப்பலப் பொக்கிஷங்களைக் கொண்டுள்ளது.

வாழ்க்கை மிகவும் வளமையானதாகும், மிகப்பலப் பொக்கிஷங்களைக் கொண்டுள்ளது. 

நாம் அதை வெற்று மனத்துடன் அணுகுகிறோம்.

நாம் மனதின் உட்புறமாக செழுமையற்று இருக்கிறோம், ஆகவே வளங்கள் நமக்கு அளிக்கப்படும் போது நாம் அதை மறுக்கிறோம்.

அன்பு ஒரு ஆபத்தான விஷயமாகும்; 

ஆகவே நம்மில் வெகு சிலரே அன்பு காட்டும் தகுதியுடையவர்களாக இருக்கிறோம், ஆகவே சிலரே அன்பை வேண்டுகிறார்கள்.

நாம் நம்முடைய வரையறையின்படி நேசிக்கிறோம்.

நமக்கு ஒரு வியாபார மனோபாவம் இருக்கிறது, மேலும் அன்பு வியாபாரத்திற்கானது அல்ல, ஒரு கொடுத்து வாங்கும் விஷயமல்ல.

அது நம்முடைய அனைத்துப் பிரச்சனைகளும் தீர்க்கப்படுகின்ற ஒருவித இருப்புநிலை ஆகும்.


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்