Wednesday, March 6, 2024
திருமாலிருஞ்சோலை- பழமுதிர்சோலை என்னும் அழகர் கோயில்
திருமாலிருஞ்சோலை- பழமுதிர்சோலை என்னும் அழகர் கோயில் ராஜகோபுரம் தாண்டியவுடன் நம்மை வரவேற்பது கல்யாணமண்டபம் . இந்த மண்டபத்தை கட்டியது இரு அரசர்கள் கிருஷ்ணப்பர் மற்றும் விஸ்வநாதர் என்று குறிப்புகள் உள்ளது .( நன்றி 1965 ல் வெளிவந்த திருமாலிருஞ்சோலை மலை ஸ்ரீ கள்ளழகர் கோயில் வரலாறு ) .இதில் கிருஷ்ணப்பர் என்பவர் ஸ்ரீ கிருஷ்ண தேவராயரா அல்லது விஸ்வநாத நாயக்கருக்கு பிறகு பட்டத்திற்கு வந்த முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கரா ? . பொதுஆண்டு 1529 முதல் 1564 - சுமார் 35 ஆண்டுகள் ஆண்ட விஸ்வநாத நாயக்கர் போற்றுதலுக்குரியவர் . 207 வருடங்கள் இருந்த மதுரை நாயக்கர் ஆட்சிக்கு இந்த 35 ஆண்டுகள் பலத்த அஸ்திவாரமாக இருக்க வேண்டும் . சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இன்றும் புது பொலிவுடன் இருக்கும் இந்த மண்டபம் ,அதன் கலைத்திறன் மிக்க சிலைகள் விஜயநகர மற்றும் மதுரை நாயக்கர் கால சிற்ப திறன்களுக்கு எடுத்து காட்டு. அழகர் கோயிலும் , விஜயநகர /மதுரை நாயக்கர் தொடர்புகள் என்று ஒரு ஆராய்ச்சியே பண்ணலாம் . -
Subscribe to:
Post Comments (Atom)
8 september
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#கச்சத்தீவுகுறித்தசிலஅறியாதவிஷயங்கள்! ———————————————————- கச்சத்தீவு பற்றிச் சில செய்திகளைச் சொல்ல வேண்டியது அவசியம்! டச்சுக்காரர்களும் ஆங...
-
#ஈவேகிசம்பத் அண்ணன் நினைவு நாள் இன்று பிப்ரவரி 23, 1977- ஆரம்ப காலக் காங்கிரஸில் காமராஜருடன் நான் இருந்தபோது சம்பத் அவர்களுடன் பயணித்த காலங...
No comments:
Post a Comment