Saturday, March 23, 2024

தோல்விகள் வலிதரும். அழுகை தரும். ஆனால் கூடவே அதை ஓங்கி மிதிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் தரும். தோல்வி சுவாரஸ்யமானது.

தோல்விகள் வலிதரும். அழுகை தரும். ஆனால் கூடவே அதை ஓங்கி மிதிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் தரும். 

தோல்வி சுவாரஸ்யமானது. 

சாதாரண வாழ்க்கையிலிருந்து கொஞ்சமாவது நகர்த்தத்தான் அது நம்மைத் தேடி வரும். 

வாடி ஒத்தைக்கு ஒத்தை பார்க்கலாம் என்று தன்னார்வமாக வந்து மோதும். அப்போதைக்கு வீழ்ந்தாலும் வலித்தாலும் பதிலுக்கு எழுந்து நின்று மோத வேண்டும். 

நம் வலியே பெரிதென நினைத்தால் அதே இடத்தில் தான் வீழ்ந்துகிடப்போம். 

யாராவது தூக்கிவிடுவார்கள் என்று நினைத்தால் அது இன்னும் மோசம். தூக்கும்போதே பாதியில் விட்டுவிடுவார்கள். அப்போது அடிக்குமேல் அடியாகும். வீழ்ச்சிக்கு மேல் வீழ்ச்சியாகும். எனவே நாமேதான் எழ வேண்டும். 

எத்தனை முறை வேண்டுமானாலும் வீழ்வோம். அத்தனை முறையும் எழுகிறோமா என்பதில்தான் வாழ்வில் சவாலே இருக்கிறது. 

புலன்களை இழந்தவர்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கை சவாலானது. போராடித்தான் வாழ்கிறார்கள். 

நமக்கு ஐம்புலன்களும் இருக்கின்றன. தோல்வி, வலி, வீழ்ச்சி, அது என்னை மட்டுமே தாக்கும் என்றெல்லாம் அழாமல் சமத்தாக எழுந்து நின்று ஓங்கி உதைப்போம் தோல்வியை.


No comments:

Post a Comment

*ஈழவேந்தன்

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...