Friday, November 29, 2024

சினிமா வேறு அரசியல் வேறு என்று பேசிக்கொள்கிறார்கள்

 சினிமா வேறு அரசியல் வேறு என்று பேசிக்கொள்கிறார்கள். வாதங்களையும் முன் வைக்கிறார்கள். நடிகர்களாக இயங்கும் தளத்தில் திடீரென்று தானே அண்ணாவும் எம்ஜிஆரும் எஸ் எஸ் ராஜேந்திரனும் கே ஆர் ராமசாமியும்

ஏன் கலைஞர் கூட சினிமா துறையில் இருந்து அறிமுகம் ஆகி அரசியலுக்கு வந்தார்கள். அவர்களது துவக்கப் புள்ளியே நாடகங்கள் மற்றும் சினிமா மட்டும் தானே! அதேபோல் என் டி ஆர் கூட ஆந்திரத்தில் சினிமாவில் இருந்து தான் அரசியலுக்கு வந்தார்! இப்போது எல்லா கட்சிகளிலும் பரவலாக நடிகர்கள் நடிகைகளும் கூட இடம்பெறுகிறார்கள்! சிலர் பதவிக்கு வந்தும் வெற்றி பெறுகிறார்கள் ! சிலர் எவ்வளவு முயற்சி செய்தும் வெற்றி பெறுவதில்லை!திறமையும் வாய்ப்பும் உள்ளவர்கள் தகுந்த இடத்திற்கு வந்து விடுகிறார்கள்! கலைஞர் இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு சினிமாவில் அவர் கதை வசனம் எழுதியது ஒரு முக்கியமான காரணம்! இந்த லட்சணத்தில் நீங்களே சினிமா வேறு அரசியல் வேறு என்று கத்திக் கொண்டிருந்தால் அதில் என்ன அர்த்தம் இருக்கிறது! அது விஜய்யை மனதில் வைத்துக் கொண்டுதானே இப்படியான பதற்றம் உங்களுக்கு ஏற்படுகிறது! அந்த பதற்றம் எல்லாம் மற்றும் கவலை எல்லாம் உங்களுக்கு தேவையில்லை! நாளைக்கு தானே தீபாவளி! அது சம்பந்தமான வாழ்த்துச் செய்தி விஜயிடம் இருந்து வந்துவிடும்! இந்த சினிமா வேறு அரசியல் வேறு என்கிற பதற்றங்களை எல்லாம் சற்று ஒத்திவையுங்கள்! #tvkmaanaadu #விஜய் #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost 7-11-2024.

No comments:

Post a Comment

30 August

  எந்த இடியட்க்கும் பதில் சொல்ல மாட்டேன் | ஸ்டாலின் உருட்டு.. அவிழ்த்து விட்ட #KSR KSR | BJP | AMITSHAH | MODI | L MURUGAN | NAINAR NAGEND...