#தமிழகஆதீனகர்த்தாக்களும்ஜீயர்களும்……
————————————— தமிழகத்தின் மடங்களில் இருக்கும் ஆதீன கர்த்தாக்களும் ஜீயர்களும் மிக ஒழுக்கமாகத் தங்கள் வாழ்க்கையைப் பேண வேண்டும் என்பதைத்தான் அவர்களின் இறை யருள் என்கிறோம். அதற்காகத்தான் அவர்களுக்காக அத்தகைய தலைமைப் பீடங்கள் கொடுக்கப்படுகிறது. கிறிஸ்துவத்தில் போப் ஆண்டவரையும் அப்படித்தான் பார்ப்பார்கள்! பெரும்பாலும் இவர்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பது ஆகம விதி! இதில் வைஷ்ணவ ஜீயர்கள் ஒருவேளை திருமணம் பண்ணி இருந்தாலும் கூட இருக்கும் வேலையை விட்டுவிட்டு ஜீயராக மாறிவிட்டால் பிறகு குடும்பத்திற்கும் செல்ல மாட்டார்கள். அவர்கள் மார்க் கத்தில் இப்படியான பாரம்பரியம் உண்டு. ஆனால் சைவ ஆதீனங்களில் உள்ள மடாதிபதிகள் திருமணம் செய்யக்கூடாது! ஒருவேளை திருமணம் செய்து கொண்டு விட்டால் அந்த ஆதீனத் தலைமை பீடத்தில் இருந்து வெளியேறிவிட வேண்டும்! அதுதான் முறை! அதை விட்டுவிட்டு ஊருக்கு உபதேசமும் செய்து கொண்டு ஆசிகளையும் வழங்கிக் கொண்டு திருமணமும் செய்து கொள்வோம் என்று சொல்வது மத அடிப்படை ஆச்சாரங்களுக்கு எதிரானது! அது தூய்மையானது அல்ல! பக்தி மார்க்கத்திற்கு ஆரோக்கியமானதும் அல்ல !புனிதமும் அல்ல! எனக்குத் திருவாடுதுறை ஆதீனம், தர்ம புரம் ஆதீனம், மதுரை ஆதீனம் போன்றவர்களுடைய வரலாறு தெரியும்! நீண்ட கால தொடர்புகள் உண்டு.குறிப்பாக முன்னாள் திருவாடுதுறை ஆதீனம், மதுரை ஆதீனம் ஆகிய இருவர்களோடு பல விஷயங்களைக் கலந்து பேசி இருக்கிறேன்! வீர சைவமோ சைவ ஆதீனங்களான அது திருவாடுதுறை ஆதீனமோ தருமபுர ஆதீனமோ இல்லை காஞ்சிபுரம் துணை ஆதீனமோ சூரிய நாராயண கோவில் ஆதீனமோ கோவை போரூர் ஆதீனமோ நகரத்தார் ஆதீனமோ இவை யாவும் மேற்சொன்ன ஆகம விதிகளை நடைமுறைகளைக் கடைப்பிடித்து வந்தவவைதான். இன்று சைவ ஆதீனங்களைக் கேவலப்படுத்தும் வகையில் நடிகைகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு வெளிநாட்டுக்கு தப்பி போய் கைலாசா என்னும் இடத்தில் தனி நாடு என்று சொல்லிக் கொண்டு ஏமாற்றி தெரியும் நித்தியானந்தா போன்று உருவாக்கப்பட்டதல்ல இந்த ஆதீனங்கள். இந்துக்களின் இருபெரும் மார்க்கங்களான சைவம் வைஷ்ணவம் இரண்டிலும் தலைமைப் பண்புள்ள ஜீயர்களும் மடாதிபதிகளும் அருள் வழங்கக் கூடிய புனிதர்களாக எதிலும் பற்றற்று உலக தேச சேமங்களுக்காக பிரார்த்தனை செய்பவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் நாம் சொல்ல வருவது! #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost 8-11-2024.
Subscribe to:
Post Comments (Atom)
8 september
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#கச்சத்தீவுகுறித்தசிலஅறியாதவிஷயங்கள்! ———————————————————- கச்சத்தீவு பற்றிச் சில செய்திகளைச் சொல்ல வேண்டியது அவசியம்! டச்சுக்காரர்களும் ஆங...
-
#ஈவேகிசம்பத் அண்ணன் நினைவு நாள் இன்று பிப்ரவரி 23, 1977- ஆரம்ப காலக் காங்கிரஸில் காமராஜருடன் நான் இருந்தபோது சம்பத் அவர்களுடன் பயணித்த காலங...
No comments:
Post a Comment