Thursday, October 10, 2024

*விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்திய கும்பல்களுக்கு வன்மையான கண்டனங்கள்*

 *விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்திய கும்பல்களுக்கு வன்மையான கண்டனங்கள்* 

சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் சுற்றுலா படகுகளை நிறுத்துவதற்கு படகு தளம் உள்ளது. அதிக சுற்றுலாப் பணிகள் வருகை தரும் நாட்களில் ஒன்றுக்கு மேற்பட்ட படகுகளை அங்கு நிறுத்தி சுற்றுலா பயணிகளை ஏற்றி இறக்க சிரமம் ஏற்பட்டதன் காரணமாக மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூபாய் 10 கோடி மற்றும் தமிழக அரசின் நிதியாக ரூபாய் ஆறு கோடி என 16 கோடி ரூபாய் செலவில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் படகு தளத்தினை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை தற்போது வாவதுறை பகுதியைச் சார்ந்த மீனவப் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்ளும் சில நபர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர். விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள படகு தளத்தை அகலப்படுத்தினால் தங்களுக்கு மீன் பிடிக்க தடையாக இருக்கும் என பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே மேற்படி பணிகளை தடுத்து நிறுத்தி உள்ளனர் சில சமூக விரோதிகள் . இது மிகவும் கண்டனத்துக்குரியது.


  இது போன்ற பிரச்சனைகளை தூண்டிவிட்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்

No comments:

Post a Comment

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo.  A single storied living quarter for the prosperous commoner. Typically  a 'garden house'; ...