Thursday, October 10, 2024

#பாரதியார் நினைவு நாள் இன்றா, நாளையா....?
























சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இல்லத்தில் பாரதியார் வசித்து வந்தார். 

தன் 39-வது வயதில், 1921-ம் ஆண்டு செப்., 11- நள்ளிரவு 1:30 மணியளவில் இறந்தார் .


நள்ளிரவு 12:00 மணிக்கு மேல் என்பது, அடுத்த நாள் கணக்கில்தான் வரும் என்பதால், செப்., 12, பாரதியார் இறந்ததாகக் குறிப்பிட்டு, அவரது உறவினர்கள் சரியான முறையில் பதிவு செய்துள்ளனர். ஆனால், அப்போதைய மரபு வழக்கப்படி சில புத்தகங்களிலும், பேச்சு வழக்கிலும், செப்.,11ல் பாரதியார் இறந்தார் என்று குறிப்பிடப்பட்டு, பின்னர் அதுவே நிலைத்துவிட்டது. 


இது குறித்து தமிழ் ஆர்வலர்கள், தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்றனர். பாரதியார் நினைவு தினம் செப்.,12 என, அதிகாரப்பூர்வமாக தேதியை மாற்ற முயன்றனர். 


இதன் காரணமாக, 2014-ல், தமிழக முதல்வராக செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது, எட்டயபுரத்தில் உள்ள கல்வெட்டில், மறைந்த தினம் செப்- 12 என்று திருத்தம் செய்யப்பட்டது. அப்போது முதல், செப்.12-ல் தான் பாரதியார் நினைவு தினத்தை தமிழக அரசு அனுசரித்து வருகிறது.


ஆனால் பெரும்பாலான இணையத் தளங்களில் செப்டம்பர் 11 என்றே இருந்து வருகிறது. 


No comments:

Post a Comment

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo.  A single storied living quarter for the prosperous commoner. Typically  a 'garden house'; ...