Saturday, July 11, 2015

வன்முறையால் இந்தியாவின் பொருளாதாரம் பாதிப்பு - Indian Economy -Terrorism .



      2014ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவில் ஏற்பட்ட கலவரங்கள், கதவடைப்புகள், பிரச்சனைகளால் பெரும் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டது. இதன் மூலம் 21.90 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. உலக அளவின் 162 நாடுகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவின் நிலவரம் இது.

 அந்தப்பட்டியலில் இந்தியா  149வது இடத்தில் உள்ளது. ஆனால் மிகவும் அமைதியாக எந்த வன்முறையும் நிகழாமல் உள்ள நாடுகள் பட்டியலில் ஐஸ்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது. பாதுகாப்பு குறைவான நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது.

அமைதி தவழும் நாடுகள் பட்டியலில் ஐஸ்லாந்தோடு, ஆஸ்திரியா, டென்மார்க், சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, பின்லாந்து, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, செக் குடியரசு ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளும், ஆஸ்திரேலியாவிலும் அமைதி நிலவுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல  நாடுகள் இராணுவச் செலவுகளையும் படிப்படியாகக் குறைத்து வருகின்றன.

ஆப்பிரிக்க நாடுகள், அரபுநாடுகள், லிபியா, சிரியா போன்ற நாடுகளில் வன்முறையும் அமைதியற்ற நிலைமையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுவருகின்றது.

இராணுவத்திற்கு அதிகம் செலவிடும் நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் இஸ்ரேலும், வடகொரியா, ரஷ்யா, அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், பிரான்ஸ், இந்தியா, சிரியா, ஏமன் இடம்பெறுகின்றன.

இந்த செய்திகளை எல்லாம் பார்க்கும் பொழுது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை நோக்கியும், அமைதியை நோக்கியும் உலகம் நகரவில்லை என்பதை அறிந்து ஆத்திரமும் கவலையுமே மேலிடுகிறது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
10-07-2015.

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...