உச்சநீதி மன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் பிரபுல் சி.பந்த் அடங்கிய அமர்வு, திருமணம் ஆகாமல் ஆண் பெண் இணைந்து வாழ்வது குற்றமல்ல என்று தீர்ப்பளித்துள்ளது.
மேலும் இந்த வழக்கில் பொது வாழ்வில் உள்ளவர்களுடைய அந்தரங்க வாழ்க்கையை வெளிப்படுத்த்துவது களங்கப்படுத்தும் குற்றமாகும் என்று அந்தத் தீர்ப்பில் சொல்லியுள்ளது.
திருமணமாகாமல் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்வது ஏற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைதான் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சரியா இல்லையா என்று தெரியாது.
ஆனால் அது சமுதாயத்தில் குடும்ப அமைப்பு முறையில் ஒரு முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.
-கே.எஸ்இராதாகிருஷ்ணன்.
24-07-2015

No comments:
Post a Comment