Saturday, November 21, 2015

தென் பெண்ணையாறு







இன்றைக்குத் தமிழகத்தில் பெரும் மழை பெய்து தென்பெண்ணையாற்றிலும் வெள்ளம். இதன் விளைவாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைத்திட்டம் (கொள்ளளவு 44.28) 42.48 அடியாகவும், கிருஷ்ணகிரி அணை (கொள்ளளவு 52 அடி) 51அடியாகவும், சாத்தனூர் அணை (கொள்ளளவு 119) 110அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள, ராயக்கோட்டை, உத்தனபள்ளி பகுதிகள் வறட்சியாக உள்ளன. தென்பெண்ணை ஆற்றில் நீர் நிரம்பினால் கிருஷ்ணகிரி தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்குப் பயனளிக்கும். தற்போது நிறைந்துள்ள இந்தத் தண்ணீரை சரியாக மேலாண்மை செய்து தென்பெண்ணை கிளை வாய்க்கால் திட்டத்திற்கு பயன்படுத்தினால் கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்டத்தின் பல பகுதிகள் பயனடையும். வீணாக கடலுக்குச் செல்லும் இந்த நீரை தென்பெண்ணைக் கிளை வாய்க்கால் மூலமாக பாசானத்திற்குப் பயன்படுத்தினால் கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்டங்கள் பயன்பெறும். இது அவசியம் கவனிக்கவேண்டிய நீண்டநாள் கோரிக்கை ஆகும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-11-2015

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...