Saturday, March 11, 2017

தீவிரவாதமும், மாவோஸ்ட் இயக்கங்களும் வலுபெறுகின்றன.

தீவிரவாதமும், மாவோஸ்ட் இயக்கங்களும் வலுபெறுகின்றன.
----------------------------------
தன்னை வறுத்திக் கொண்டு பதினாறு ஆண்டுகள் உண்ணாநோன்பு இருந்த தியாகத்தின் அடையாளத்திற்கு நோட்டோவை விட குறைவாக 90 ஓட்டுத்தான் கிடைத்திருப்பது ஜனநாயகத்தில் அபத்தமான குறியீடு அல்லவா?

நான் அடிக்கடி தகுதியே தடை என்று சொன்னது நண்பர்களும் இன்றைக்கு சரிதான் என்று கூறுகின்றனர்.

ஆற்றலும், நேர்மையும், களப்பனியும், கற்றுலும், புரிதலும்  தேவையில்லை என்று பொதுமக்களின் தீர்ப்பு இருக்கும்போது நியாயங்கள் தோற்றுவிட்டன என்பதுதான் அர்த்தம்.
இம்மாதிரி ரணத்தை தேர்தல்களில் நானும் சந்தித்துள்ளேன்.
நதிநீர் பிரச்னைகள், விவசாயிகள் பிரச்னைகள், சுற்றுச்சூழல் பாதிப்பு, மனித உரிமை பிரச்னைகள் என உச்சநீதிமன்றம் வரை 1980களில் சென்றவன் என்ற முறையில் வெற்றியை ஈட்ட முடியவில்லையே.
மக்களுக்காகவே தன் வாழ்வின் பெரும் பகுதியை அர்ப்பணித்து சேவை செய்வோர்,அரசியலில் தமிழகத்தில் பிரச்சனைகளின் போது மக்களோடு இணைந்து நின்று செயலாற்றிய பலர் கடந்த தமிழக தேர்தல்களில் தோல்வியடைந்தனர். 

இது ஒரு வகை வணிக தந்திரம்.
அரசியல் வியாபாரம் ஆனபிறகு, சமூக விரோதிகள் கையில் வெற்றி செய்திகள் சிக்கும் போது நல்லவர்கள் இந்த கேடுக்கெட்ட அரசியலை புறக்கணிப்பார்கள். இதனால் தான் தீவிரவாதமும், மாவோஸ்ட் இயக்கங்களும் வலுபெறுகின்றன.

போராளிகள் போரடி விட்டார்கள் மக்கள் கிரிமினல்கள் ஹீரோக்கள் ஆக்கிறார்கள் ..

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...