Friday, March 10, 2017

தண்ணீர்விற்பனை

நெல்லுக்கு பாய வேண்டிய தண்ணீர் இங்கே ஆடம்பரத் தோட்டங்களின் புல்வெளிகளில் பாய்கிறது. கிராமங்களில் கண்மாய் கள் காய்ந்துகிடக்க இங்கே நீச்சல் குளங்கள் நிரம்பி வழிகின்றன. கிராமங்களில் தண்ணீர் இல்லாமல் கால்நடைகள் மடிந்துகிடக்க இங்கே கார்கள்கூட கிராமத்து தண்ணீரில்தான் கழுவப்படுகின்றன. எதையும் மிகைப் படுத்திச் சொல்லவில்லை.
சென்னை யின் பழைய மகாபலிபுரம் சாலையின் மென்பொருள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அவை சார்ந்த அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கும் மட்டுமே, நாள் ஒன்றுக்கு 100 கோடி ரூபாய் அளவுக்கு தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. 12 ஆயிரம் லிட்டர் கொண்ட ஒரு லோடு தண்ணீரின் விலை ரூ.800 முதல் ரூ.1,200 வரை. 24 மணி நேரமும் தண்ணீர் லாரிகள் ஓடுகின்றன. அத்தனையும் நமது கிராமங்களில் விவசாய கிணறுகளில் இருந்தும் நிலத்தடியில் இருந்தும் எடுக்கப்படுபவை. அத்தனையும் விதிமுறை மீறல்கள்.
Source:The Hindu 
#Ksrpost
#Ksradhakrishnanpost
#கிணறு
#தண்ணீர்விற்பனை
#நிலத்தடிதண்ணீர்

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...