Thursday, October 18, 2018

தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’



--------------------------------------
கிராமத்தில் படிக்கும்போது சரஸ்வதி பூஜை என்று கொண்டாடுவார்கள். அப்போதெல்லாம் உலக நடவடிக்கைகள் எல்லாம் தெரியாது. பத்து வயது காலங்களில் புத்தகங்களை எல்லாம் கட்டி மஞ்சள் தடவி, மஞ்சளில் சரஸ்வதி போன்ற உருவத்தை வடித்து வணங்குவதுண்டு. இதெல்லாம் 50 ஆண்டுகளுக்கு முன்பு. தி. ஜானகிராமனின் “அம்மா வந்தாள்” என்ற படைப்பில் சரஸ்வதி பூஜை பற்றி வரும் வரிகள்…

“சரஸ்வதி பூஜையன்று புத்தகம் படிக்கக்கூடாது என்பார்கள். ஆனால் அன்று ஒரு நாளுமில்லாத திருநாளாப் புத்தகத்தின் மேல் வருகிற ஆசை!. கீழே கிடக்கிற--பல்பொடி மடிக்கிற--காகிதத்தையாவது எடுத்துப் படிக்க வேண்டும் என்ற மோகம். அப்படி ஒரு மோகம் அல்லவா பிறந்திருக்கிது இன்று இந்தக் காவேரி மீது!”

‘அம்மா வந்தா’ளை மீறலின் புனிதப் பிரதியாக கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்துவரும் ஒபக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதிகளுக்குக் கட்டுப்பட்டவை என்றும் இல்லை அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை என்றும் இருவகையான கருத்தோட்டங்கள் உள்ளன. இந்த கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இருக்கம் என்பதை வலியுறுத்துகிறது கதை. இவ்விரு நிலைகளில் ஊசலாடுபவர்களாகவே முதன்மைப் பாத்திரங்களாக இந்த படைப்பில் அமைகின்றனர். 

அம்மா வந்தாள் ஐந்தாறு பெண்மணிகளின் கலவையாகவும், அகண்ட காவிரி, பாடசாலை, சென்னை பெரிய மனிதர்கள், தஞ்சை மாவட்ட மிராசுதாரர்களின் லௌகீக, ஏகாந்த அடாவடிகள் என இந்த கதையின் போக்கு செல்கிறது. கலையுலகமும், யதார்த்த வாழ்க்கையும் வேறுபட்டது. விசித்திரமான அனுபவங்கள், நிகழ்வுகள் இன்றைக்கே  சொல்கின்ற பின்நவீனத்துவம் அன்றைக்கே தி. ஜானகிராமனின் படைப்புகள் குறிப்பாக அம்மா வந்தாள் இல் இருப்பதை உணரலாம்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
18/10/2018

#அம்மா_வந்தாள்
#தி_ஜானகிராமன்
#மானிடவியல்
#KSRPostings
#KSRadhakrishnanPostings

No comments:

Post a Comment

hhhhhhh

hhhhhhh