*உலக வெப்பமயமாதலில் தமிழ்நாடும் தப்பவில்லை. தமிழக மக்களே சிந்தியுங்கள்.*
---------------------------------
புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த கடந்த பதிவையொட்டி, 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிப்பதால் ஆசிய நாடுகள் தான் அதிகம் பாதிக்கப்படும். குறிப்பாக இந்தியாவில் டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், அகமதாபாத் போன்ற பெருநகரங்களும், பாகிஸ்தானில் கராச்சி போன்ற நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களும் பாதிக்கப்படுகின்ற நிலைமைக்கு தள்ளப்படும். இதனால் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் மட்டுமல்லாமல் மேலும் பல புதிய நோய்கள் உருவாகி உயிரிழப்புகள் போன்ற கடுமையான சூழல் ஏற்படும். வறட்சி ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்படும். உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்று அந்த அறிக்கை சொல்கிறது . இந்த அபாய மணியை எப்படி எதிர் கொள்கிறோம்.
நாமோ திரைப்படங்களையும், தொலைக்காட்சி தொடர்களையும் பார்த்து வருகிறோம்.அதுவே நமக்கு ஆதாரம் என்ற நிலை.சுற்று சூழல் விடயத்தில் தொலைநோக்குப் பார்வையும், எச்சரிக்கை விழிப்புணர்வும் நம்மிடம் இல்லை.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
08-10-2018
No comments:
Post a Comment