Saturday, October 13, 2018

*வைரமுத்து - சின்மயி #me_too போன்ற பிரச்சனையில்...*



--------------------------------

பலர் என்னிடம், உங்களுடைய சமூக வலைத்தளங்களில் வைரமுத்து-சின்மயி #me_too பிரச்சனை குறித்தும், நிமிர வைக்கும் நெல்லை என்ற நூலை எழுதிய தாங்கள் தாமிரபரணி புஷ்கரணி குறித்து கருத்தை சொல்லவில்லை என்று என்னிடம் கேட்கின்றனர். என்னைப் பொறுத்தவரை இதுபோன்ற விடயங்களில் எல்லாம் கவனமும் கிடையாது, அது குறித்த புரிதலும் எனக்கு கிடையாது என்றேன். ஆனால் #MeToo இந்நிகழ்வு பொது சமூக உளவியலில் ஒரு கண்காணிப்பு அமைப்பாக செயல்படும் என்ற வகையில் சில சாதக பாதகங்கள் உண்டு. 

எனக்கோ,

1. தமிழக நதிநீர் சிக்கல்கள், நதிநீர் இணைப்பு,
2. விவசாயிகள் பிரச்சனை, விவசாயிகள் தற்கொலை, மரபுரீதியான தற்சார்பு விவசாயம்,
3. ஈழத் தமிழர் பிரச்சனை,
4. கச்சத்தீவு, தமிழக மீனவர் பிரச்சனை,
5. தமிழகத்தில் சுற்றுச் சூழலை பாதிக்கும் தொழிற்சாலைகள்
6. தமிழகத்தில் கடலூர் உள்பட பல துறைமுகங்களை அமைக்கும் திட்டங்கள்,
7. தமிழகத்தில் முடக்கப்பட்ட இரயில்வே திட்டங்கள்,
8. சேலம் இரும்பாலை திட்டம்,
9. நெய்வேலி நிலக்கரி சுரங்கப் பிரச்சனைகள்,
10. சேது சமுத்திரத் திட்டம்,
11. மேற்கு தொடர்ச்சி, கிழக்கு தொடர்ச்சி மலைப் பிரச்சனைகள்,
12. விவசாயிகள் நிலங்கள் பறிபோதல்,
13. விவசாயத்திற்கு பயன்படும் நீர்நிலைகள் பாதுகாப்பு,
14. உள்ளாட்சி, கிராம சபை குறித்தான சிக்கல்கள்,
15. மத்திய மாநில உறவுகள்,
16.  ஹைட்ரோகார்பன், மீத்தேன்,கூடங் குளம் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்கும் பல தொழிற்சாலைகள்,
17.  நீண்டகாலமாக நிறைவேற்ற வேண்டிய விமான நிலைய விரிவாக்க திட்டங்கள் மற்றும் டீசல் -பெட்ரோல் 
விலையேற்றம்,மனித உரிமைகள் போன்ற நடைமுறை பிரச்சனைகளிதான் எனக்கான பார்வை
உண்டு.

மத்திய அரசால் தமிழகத்தில் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்களை குறித்து விரிவான நூலாகவும் எழுதியுள்ளேன். இத்தகைய அத்தியாவசிய தமிழகப் பிரச்சனைகள் தான் எனக்கு தெரியும். அது குறித்தான புரிதலுமே எனக்கு உள்ளது. 
வைரமுத்து சங்கதியும், தாமிரபரணி புஷ்கரணி சமாச்சாரமும் எனக்கு தெரியாது. தாமிரபரணி புஷ்கரணி விழா ஒரு மதரீதியான விழாவாக கொண்டாடுகிறார்கள். வைரமுத்து பிரச்சனை தனிப்பட்ட இருவரின் பிரச்சனை. இந்த பிரச்சனைகளை குறித்து அறியவேண்டிய சூழலும் தேவையும் இப்போது இல்லை. இவற்றில் நான் என்ன கருத்து சொல்லிவிட முடியும் என்று நண்பர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் தீர்க்கப்பட வேண்டிய தலையாய பிரச்சனை பல உள்ளது.

சில செய்திகளைக் கண்டும் காணாமல் செல்கிறோம்.சிலவற்றை ஊதிப்பெரிதாக்குகிறோம்.பணம்,புகழ் இருந்தால் போதும் ஊடகங்கள் விளக்கு பிடிக்கும்.

எந்தவொரு நியாயமான அல்லது நியாயமற்ற காரியத்தையும் இயக்கமாக பரவலாகத் துவங்கும்போதும்,  சுயயிருப்பு காட்டும் புகழ்வெறி வன்மங்களையும் தனிப்பட்ட விருப்பத்திற்கு  ஒவ்வொரும் அடித்துக் கொண்டு இறுதியில் ஆளுக்கு ஆள் அதிலிருந்து விடுபட்டு தற்புகழ்சிக்கு அடுத்த விடயத்திற்கு தாவும் தொடரும் வரையில், எந்தத் தீர்வும் எதிலும் எட்டப்படாமல் அத்தனையும் நீர்த்துப் போகும் இதுவும் டான் குயிக்சாட்தானமான நகைச்சுவை . பாசங்கு போலித்தனங்களால் என்ன பயன்?

நான் ஏற்கனவே சொல்லியுள்ளதை போல, “*Issues are non-issues here, Non-issues are issues here*” என்பதை மட்டுமே சொல்லிவிட முடியும்.
உண்மையான  பிரச்சனைகளை
தீர்க்க நேர்மையான முனைப்பு வேண்டும்.

*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
13-10-2018
#பிரச்சனைகள்
#நாடு
#MeToo
#KSRadhakrishnan_postings
#KSRpostings
#TN_Problems
#தமிழக_பிரச்சனைகள்
#me_too

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...