Tuesday, September 7, 2021

#அலங்காநல்லூர்_சர்க்கரை_ஆலை: ——————————————————-

 #அலங்காநல்லூர்_சர்க்கரை_ஆலை:

——————————————————-
தலைவர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் 1968-ல் மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர் கூட்டுறவுச் சர்க்கரை ஆலைத் தொடங்கப்பட்டது. திரும்பவும் கலைஞர் ஆட்சிக்காலத்தில் 2010-ல் ஜூன் 06-ஆம் தேதி ரூ.110 கோடி மதிப்பீட்டில் இந்த ஆலையில் துணை மின்நிலையம் தொடங்கப்பட்டது. 85% சதவிகித பணிகள் நிறைவுபெற்ற போது அ.தி.மு.க ஆட்சி பொறுப்புக்கு வந்ததால் இந்தத்திட்டத்தைக் கிடப்பில் போட்டார்கள். 15 மெகாவாட் மின்சாரம் இந்த ஆலையினால் உற்பத்தி செய்யமுடியும்.
அதே போல சர்க்கரை உற்பத்தி ஆலையும் ரூ.10 கோடியில் இயந்திரங்கள் சீர் செய்து கரும்பு அரவையும் தொடங்க வேண்டும். இதனால் மின் நுகர்வோருக்குப் பயனும், 1200 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
சர்க்கரை ஆலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் இணை மின் திட்டங்களை உருவாக்க அரசு ஊக்கமளித்துவருகிறது. சர்க்கரை ஆலைகளின் நிதி நிலையை மேம்படுத்திட கரும்பின் துணைப் பொருள்களில் ஒன்றாகிய கரும்புச் சக்கையில் இருந்து மின்சாரம் தயாரிக்க அரசு முடிவு எடுத்தது.
அதனடிப்படையில், 12 சர்க்கரை ஆலைகளில் ரூ.849 கோடி செலவில் இணை மின் உற்பத்தித் திட்டங்கள், ரூ.276 கோடியில் இயந்திரங்களை நவீனமயமாக்கும் திட்டங்கள் என மொத்தம் ரூ.1,125.63 கோடி மதிப்பிலான திட்டங்கள் இப்போது தொடங்கி வைக்கப்படுகின்றன. அடுத்த 18 மாதங்களில் இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
06.09.2021

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...