Sunday, January 19, 2025

ஏற்கனவே இந்தியா இலங்கைக்கு 255 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது.சீனாவிடம் மட்டுமே 900 கோடி ரூபாய் அதுவும் கொரோனா காலத்தில்.. இந்திய நிறுவனமான (ITC) Indian Topaco Company யின் முதலீட்டு கட்டுமானமாக கருதப்படும் ITC Ratnadipa, Colombo. 6 நட்சத்திர ஹோட்டல் கட்டுமானத்தின் பெறுமதி சுமார் 450 மில்லியன் அமெரிக்க டொலர். வேளைவாய்ப்பானது, 600 இலங்கையர்களுக்கு 20 இந்தியர்கள் என்ற அடிப்படையிலேயே கட்டுமான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. தற்போதுவரை அதே நடைமுறையும் செயற்றிட்டமுமே கடைபிடிக்க படுகிறது. 450 மில்லியன் அமெரிக்க டால்களுக்கும் தான்டி தற்போது இன்னு செலவீனங்கள் அதிகரித்தாலும் பெறும் இலாபகரமான முதலீடாக ITC நிறுவனத்திற்கு அமைந்துவிட்டது.. அதேபோல்தான் இந்த சீன நாட்டின் ஒப்பந்தமும்.. Sinopac நிறுவனம் சுமார் 1600 மில்லியன் அமெரிக்க டால்களை இலங்கையில் முதலீடு செய்யவுள்ளது.. வேலைவாய்ப்பும் பொருளாதாரமும் இலங்கைக்கு.. இலாபம் சீன நிறுவனத்திற்கு.. இலங்கை தனக்கு தானே ஆப்பு வைத்து கொள்ளும் விசித்திரமான நாடு எவ்வித குறையும் இல்லாமல் இயற்கை வளங்கள் மிகுந்த நாடு ஓரளவு உருப்படியான உள் கட்டமைப்பு செய்தால் கூட சிங்கப்பூர் ஜப்பான் தென் கொரியா போல் சிறந்து விளங்கும் நாடுகளில் ஒன்றாக இருக்கலாம்...... ஆனால் இலங்கையர்களின் கோணல் புத்தி அந்த நாடு எப்போதும் பிறரை எதிர்பார்த்து வாழ்வது போலவே இருக்கும்.

இலங்கை அதிபர் அனுர இந்தியா வந்த பிறகு  சீனா  நான்கு நாள் பயணமாக சீனா சென்றார் . இந்தியா வந்தபோது இலங்கை இந்தியா மற்றும் இந்து மகா பெருங்கடலில் பாதுகாப்பிற்கு எப்போதும் கடமைப்பட்டுள்ளது என்று சொல்லி இலங்கை வளர்ச்சிக்கான கடனும் பெற்றுச் சென்றுள்ளார். அதேபோல் சீனாவில் பேட்டி கொடுக்கும் பொழுது இலங்கை எப்பொழுதும் சீனாவிற்கு நட்பு நாடாக இருக்கும் என்று சொல்லி அங்கும் கடன் பெற்று கொள்கிறார். இதை எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரியவில்லை. 



அங்கே வாழும் ஈழத் தமிழர்களுக்கு அதாவது இந்தத் தேர்தலில் அதிகம் தனக்கு வாக்களித்த  ஈழத் தமிழர்களுக்கு தன்னால் இயன்ற நலம் செய்வதாகச் சொல்லிக் கொள்ளும் இலங்கை அதிபர் அங்குள்ள நிலவரப்படி ஈழத் தமிழர்களுக்கும் சீனர்களுக்கும் இடையே நடக்கும் உற்பத்தி உழைப்பு வாழ்வியல் முரண்பாடுகளை எப்படி சரி செய்வேன் என்பதைப் பற்றி எங்கும் எதுவும் பேசுவதில்லை. உண்மையில் தமிழர்களின் பல வேலை வாய்ப்புகள் தொழில்கள் யாவும் அங்கு சீனர்களால் கைப்பற்றப்படுகின்றன. நிலவரம் இப்படி இருக்கையில் சீனாவிற்குத் தலையையும் இந்தியாவிற்கு வாலையும் அல்லது இந்தியாவிற்குத் தலையையும் சீனாவிற்கு வாலையும் காட்டிக் கொள்வது அவரது புத்திசாலித்தனமாகத் தோன்றுகிறது! 

ஒரு காலத்தில் கம்யூனிஸ சித்தாந்தங்களை மேற்கொண்ட ஸ்ரீலங்கா சமசமா கட்சிக்கு அடுத்து ஜனதா விமுக்திப் பெமுரனா என்ற சிங்கள பேரினவாத அமைப்புக்குள் இருந்த  சிந்தனையாளர் அனுரா என்பது அறிந்ததே! இன்று ஒருபுறம்  மாவோயிஸ்ட் சீனத் தன்மையைக் கை கொள்கிறவர் என்று அறியப்பட்டவர் . மறுபுறம் அதற்கு எதிரான பௌத்த மத அமைப்பையும் ஒரு சேர இணைத்துக் கொள்வதாகச் சொல்கிறார்!  நாடாளும் அரசியலை  இப்படி எல்லாம் தந்திரமாக எப்படிக் கையாள முடியும் .? இந்த இரட்டைத்தன்மை ஆபத்தானது என்று மட்டும் தெரிகிறது!

புதிய திட்டங்கள் எதுவுமே இல்லாத

இலங்கை ஜனாதிபதியின் சீனா பயணம் .


ஜனாதிபதி சீனாவுக்குச் சென்று பழைய திட்டங்களில் மட்டுமே கையெழுத்திட்டார் என்றும், புதிய திட்டங்கள் அதில் எதுவும் இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க , கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.


பல திட்டங்கள் கடந்த கால திட்டங்களாகும். புதிய முதலீடுகள் எதுவும் வரவில்லை. குறிப்பாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைப் பொறுத்தவரை, அது நீண்ட காலமாக ஒரு யோசனையாக இருந்து வருகிறது.


2011 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபட்சே அரசாங்கத்தின் போது, ​​அந்த துறைமுகம் கட்டப்பட்டு வந்தபோது, ​​அந்த துறைமுகத்தைச் சுற்றி ஒரு தொழில்துறை பூங்காவிற்கு இரண்டாயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த சுத்திகரிப்பு நிலையம் குறித்து ஒரு அம்சம் இருந்தது. அதேபோல், மைத்திரிபால சிறிசேனவின் ஆரம்ப நாட்களில், நாங்கள் சீனாவுக்குச் சென்றோம். இரண்டு சுத்திகரிப்பு நிலையங்களைக் கட்டும் அமைச்சரவை ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சர் மலிக் சமரவிக்ரம அழைத்து வரப்பட்டுள்ளார். இதேபோல், இது முந்தைய அரசாங்கங்களால் தொடர்ந்து விவாதிக்கப்பட்ட ஒன்று.


புதிதாக எதுவும் இல்லை. சீனா இலங்கையை ஹாங்காங்கைப் போல தனது சொந்த மாகாணமாக்க முயற்சிப்பதாகக் கூறிய தலைவர்கள், துறைமுக நகரம் குறித்து தவறான கருத்துக்களைப் பரப்பி இதைச் செய்ய வேண்டியிருந்தது, 


இதன்படி, இலங்கையின் தென் பகுதியிலுள்ள ஹம்பாந்தோட்டையில் புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை நிறுவ உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.இலங்கை மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு, சினொபெக் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் இந்த உடன்படிக்கை ஆகியுள்ளது. இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் 15 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கையெழுத்தானது.


இந்தியப் பெருங்கடல்

மண்டலத்தில் இந்து மகா சமுத்திரம் அமைதி மண்டலமாக பாதுகாக்கபட

வேண்டும். அந்நிய சக்திகள் ஊடுருவி ஒரு சிக்கலான பகுதியாகிவிட்டது. இலங்கையின் தயவால் சீனா, அமெரிக்கவின் டிகோகர்சியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் என பல நாடுகள் இந்திய பெருங்கடல் பரப்பில் ஊடுருவி நம்முடைய பாதுகாப்பைகேள்விக் குறியாக்கி

விட்டார்கள்.


இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நாடான இந்தியக் கடற்கரையின் நீளம் 7,500 கி.மீ ஆகும். இந்த மண்டலத்தில் இருக்கக்கூடிய அனைத்து நாடுகளின் அமைதி, வளமான சகவாழ்வுக்கு இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டிய கடமை உள்ளது. இந்தியப் பெருங்கடல், இந்த மண்டலத்தில் உள்ள நாடுகளின் பொதுவான சொத்தாகும். உலகின் பாதி அளவு சரக்கு கப்பல்கள், மூன்றில் ஒரு பங்கு சரக்குப்\ப் போக்குவரத்து, மூன்றில் இரண்டு பங்கு எண்ணெய் போக்குவரத்து காணப்படும் பெரும் கடல் வழித்தடத்தை கட்டுப்படுத்துவதால், பன்னாட்டு வர்த்தகம், போக்குவரத்தின் உயிர்த்தடமாக இந்தியப் பெருங்கடல் உள்ளது.

இந்தியப் பெருங்கடல் கொள்கைப்படி, இந்த மண்டலத்தின் அனைவருக்கும் பாதுகாப்பு, வளர்ச்சி, என்பதுதான் நோக்கமாகும். பாதுகாப்பு, வர்த்தகம், இணைப்பு, பயங்கரவாதத்துக்கு எதிரான போர், நாடுகளுக்கு இடையிலான கலாச்சாரப் பகிர்வு போன்றவை குறித்து விவாதிக்க வேண்டும். நிலம், கடல் எல்லைகளைப் பாதுகாப்பது, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு கூட்டுறவு, நிலையான மற்றும் சீரான மீன் பிடிப்பு, இயற்கை பேரிடரை கையாள்வது தொடர்பான கூட்டு நடவடிக்கைகள், பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத மீன் பிடித்தலுக்கு எதிரான   நோக்கமாகும். 21-ம் நூற்றாண்டில் இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் உள்ள நாடுகளின் நிலையான வளர்ச்சி, மேம்பாட்டுக்கு கடல்வளத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்தியப் பெருங்கடல் நாடுகளுக்கு இடையே சுற்றுலா, வர்த்தகத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. புதிதாக தோன்றும் சவால்களை எதிர்கொண்டு, வாய்ப்புகளை உருவாக்குவதுதான் இந்தியப் பெருங்கடல் நாடுகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.

விமானத் தொழில், ராணுவத்துறையில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது.  பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், செஷல்ஸ், மியான்மர் உள்ளிட்ட இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் உள்ள 28 நாடுகள்; இந்தியப் பெருங்கடல் நாடுகளுக்கு ஏவுகணைகள், மின்னணு போர்க் கருவிகள், இலகுரக போர் விமானங்கள், போர் ஜெலிகாப்டர்கள், பல்பயன் இலகு போக்குவரத்து விமானங்கள், போர் மற்றும் ரோந்துக் கப்பல்கள், ரேடார்கள், டாங்கிகள், ராணுவ வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான போர் ஆயுதங்கள், தளவாடங்களை வழங்க இந்தியா தயாராக உள்ளது.

இந்தியப் பெருங்கடல் நாடுகளை ராணுவத் தொழில் ஒத்துழைப்பின் வாயிலாக, இந்தியாவின் வளத்தை பிற நாடுகளோடு ஒருங்கிணைக்க முயற்சித்து வருகிறது. இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் இருக்கும் பெரும்பாலான நாடுகள் உலக அளவில் போட்டித் திறன் பெற்று, புதிய தொழிநுட்பங்களை மேம்படுத்தி வருகின்றன. இதில் கப்பல்களை வடிவமைத்து, கட்டமைப்பதற்காக ராணுவக் கப்பல் தளத்தை அமைத்து வருகின்றன. அவற்றை கூட்டு ஒத்துழைப்பு வாயிலாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்திய விமானத் தொழில், ராணுவத் தொழில் துறை, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கவர்ச்சிகரமான வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. இதன் மூலம் இந்தியாவுடனான ஒத்துழைப்பை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்லலாம். சீனாவின் ஆதிக்கம் இங்கு அத்துமீறி அஅதிகரிக்கிறது. சீனா, கொழும்பு கிழக்கு முனையம், கச்சத் தீவு அருகில் சிறு தீவுகளில் காற்றாடி மின்சாரம் உற்பத்தி குத்தகை, சினா உளவு கப்பல்கள், போர் கப்பல்கள் இலங்கையை தோவை இல்லாமல் வருவது.  அமெரிக்காவின் 

டிகோ கரிசியா சிக்கல்கள் வேறு உள்ளது.


ஏற்கனவே இந்தியா இலங்கைக்கு 255 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது.சீனாவிடம் மட்டுமே 900 கோடி ரூபாய் அதுவும் கொரோனா காலத்தில்..


இந்திய நிறுவனமான (ITC) Indian Topaco Company யின் முதலீட்டு கட்டுமானமாக கருதப்படும் ITC Ratnadipa, Colombo.  6 நட்சத்திர ஹோட்டல் கட்டுமானத்தின் பெறுமதி சுமார் 450 மில்லியன் அமெரிக்க டாலர். 


வேலைவாய்ப்பானது, 600 இலங்கையர்களுக்கு 20 இந்தியர்கள் என்ற அடிப்படையிலேயே கட்டுமான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.  தற்போதுவரை அதே நடைமுறையும் செயற்றிட்டமுமே கடைபிடிக்க படுகிறது.


450 மில்லியன் அமெரிக்க டால்களுக்கும் தான்டி தற்போது இன்னு செலவீனங்கள் அதிகரித்தாலும் பெறும் இலாபகரமான முதலீடாக ITC நிறுவனத்திற்கு அமைந்துவிட்டது..


அதேபோல்தான் இந்த சீன நாட்டின் ஒப்பந்தமும்..  Sinopac நிறுவனம் சுமார் 1600 மில்லியன் அமெரிக்க டால்களை இலங்கையில் முதலீடு செய்யவுள்ளது..வேலைவாய்ப்பும் பொருளாதாரமும் இலங்கைக்கு.. இலாபம் சீன நிறுவனத்திற்கு..


 இலங்கை தனக்கு தானே ஆப்பு வைத்து கொள்ளும் விசித்திரமான நாடு எவ்வித குறையும் இல்லாமல் இயற்கை வளங்கள் மிகுந்த நாடு ஓரளவு உருப்படியான உள் கட்டமைப்பு செய்தால் கூட சிங்கப்பூர் ஜப்பான் தென் கொரியா போல் சிறந்து விளங்கும் நாடுகளில் ஒன்றாக இருக்கலாம்...... ஆனால் இலங்கையர்களின் கோணல் புத்தி அந்த நாடு எப்போதும் பிறரை எதிர்பார்த்து வாழ்வது போலவே இருக்கும்.




கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

#KSRPost

19.01.2025

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்