Tuesday, January 21, 2025

#பங்களாதேஷ் அருகே

 #பங்களாதேஷ் அருகே



#செயின்மார்ட்டின்தீவு கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
———————————————————
அமெரிக்காவின் ஆதிக்கம் உலகின் நிலப் பகுதிகளில் எல்லாம் பரவி வருவதை வளரும் நாடுகள் பலவும் கவலையுடன் அனுசரிக்கின்றன.
வங்கதேசத்திற்கு சொந்தமான அதன் கடல் பகுதியில் ஒன்பது கிலோமீட்டர் தொலைவிலும் மியான்மரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள செயின் மார்ட்டின் தீவு கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது.
இந்தச் செயின் மார்ட்டின் தீவை மியான்மரும் உரிமை கொண்டாடி வரும் நிலையில் இந்த தீவோ சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாகத் திகழ்கிறது! இந்த தீவில் தேங்காய் விளைச்சல்கள் அதிகமாக இருக்கின்றன! மீன்பிடித் தொழிலும் சிறப்பாக நடந்து வருகிறது.
வங்கதேசத்தின் ஒரே பவளப்பாறைத் தீவு என்றும் இது அழைக்கப்படுகிறது! தேங்காய் அதிகம் விளைவதால் “கோக்கனட் ஐலேண்ட்” என்ற பெயராலும் இது வழங்கப்படுகிறது. வங்கக் கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதற்காக இந்தத் தீவில் விமானத் தளம் அமைக்க அமெரிக்கா விரும்பி வருவதால் இது குறித்து அது வங்காளதேசத்திற்கு அதிகம் நெருக்கடியைத் தந்து வருகிறது. என்னைப் பொறுத்தவரையில் இப்படி ஒவ்வொரு நாட்டையும் தனிமைப்படுத்தித் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரும் அமெரிக்காவின் போக்கு கண்டிக்கத்தக்கது மட்டுமில்லாமல் உலக ஜனநாயகத்தின் இழப்பாகவும் வன்முறையாகவும் இருப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் இயலவில்லை !
வங்கதேசத்தின் அதிபர் ஹசீனாவிற்கு இது ஒரு மிகப்பெரும் தலைவலியாக இருக்கிறது என்பது அவரது ஆதரவாளர்களின் சர்வதேச அரசியல்க் குரலாக இருக்கிறது! வேறு என்ன செய்ய!மனித
உரிமைக்கென ஊதுகிற சங்கை ஊதித்தான் ஆகவேண்டும்!

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்