Tuesday, January 21, 2025

#JusticeGiridharMalaviya #BHU #Varanasi

 #JusticeGiridharMalaviya




—————————————-
விடுதலைப் போராட்ட வீரரும் மகாத்மா காந்தியின் உற்ற நண்பரும் காசி இந்து பல்கலைக்கழகத்தை ஸதாபித்தவருமான மறைந்த மதன் மோகன் மாளவியா அவர்களின் கொள்ளுப் பேரன் ஜஸ்டிஸ் கிரிதர் மாளவியா அவர்கள் நேற்று முன்தினம் காலமானார்.
கிரிதர் மாளவியா அவர்கள் காசியில் தன் இளமைக் காலக் கல்வியை துவங்கி பனாரஸ் இந்துக் கல்லூரியில் தன் மேற்படிப்பை முடித்தார்! தொடர்ந்து அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்! பிற்காலத்தில் உயர் நீதி மன்ற நீதிபதியாகவும் ஆனார்!
நான் இரண்டு மூன்று முறை பனாரஸ் பல்கலைக்கழகத்திற்குச் சென்ற போது அவரைச் சந்தித்தது உண்டு! அப்போது அவர் பனாரஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் இருந்தார்! பனாரஸ் பல்கலைக்கழகத்தைப் பொருத்தவரை அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் வேந்தர் ஆக முடியும்! அதற்கு முன்பாக காஷ்மீர் ராஜாவாக இருந்த கரன்சிங் போன்றவர்களின் குடும்பத்தினர் தான் வேந்தராக இருந்தார்கள்!
அதற்குப் பிறகு அரச குடும்பத்தைச் சாராத கிரிதர் மாளவியா அவர்கள் தான் முதன் முதலாகப் பனாரஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஆனார்!
அக்காலங்களில் வாரணாசியில் கிரிதர் மாளவியா அவர்கள் பல்வேறு பணிகளைச் செய்தார்! கங்கையைத் தூய்மைப்படுத்த முதன் முதலில் முனைந்தவர் இவர்தான்! அதற்காக மிகுந்த அளவில் பாடுபட்டார்! தற்சமயம் வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக நின்ற மோடி அவர்களை இரண்டு முறை முன்மொழிந்தவர் மாளவியா அவர்கள் தான்! காசியின் முதன்மைக் குடிமகனாக எல்லாராலும் போற்றப்பட்டவர்! பாராட்டப்பட்டவர்! அதுபோக ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்காகவும் அதைத் தீர்த்து தரும் வகையில் பாடுபட்டவர்!
குடிசைகளில் இருந்த அவர்களை வீடுகள் கட்டி தந்து குடியேறச் செய்த அருமைப் பண்பாளர்! அவரை ஒரு முறை நான் சந்தித்தபோது பாரதி பற்றி மிகவும் சிறப்பாக வியந்து பாராட்டினார்! பாரதியின் படத்தை நான் அவருக்கு அப்போது வழங்கியதும் உண்டு. அன்னாரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
Malaviya was the grandson of Madan Mohan Malaviya (founder of Banaras Hindu University) and only son of Govind Malaviya (6th vice-chancellor of Banaras Hindu University). He was born on 14 November 1936 in Varanasi. Malaviya was a graduate of Political Science & Law from the Banaras Hindu University.
Giridhar Malaviya's son Manoj Malaviya is a senior Indian Police Service officer, and the current Director General of Police of West Bengal Police.
Malaviya died on 18 November 2024, at the age of 88.
Deep condolences

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்