Sunday, July 24, 2016

கோதையாறு அணை

கோதையாறு அணை, மேற்கு தொடர்ச்சி மலையின் மிக அற்புதமான இடம். சுமார் உயரத்தில் உள்ள, மிகவும் பசுமையான அணை கோதையாறு. நாளுமுக்கியிலிருந்து இடப்பக்கமாக காக்காச்சி தாண்டி 6 கிலோமீட்டர் சென்றால் கோதையாறு டேம். இந்த அணை அப்பர் கோதையாறு அணை என்று அழைக்கின்றனர். இந்த அணை இரண்டு பாகங்களாக உள்ளது.

சின்னக் குட்டியாறு 1 மற்றும் சின்னக் குட்டியாறு 2 ஆகிய அணைகள் அளவில் சிறியவையாகும். இதில் சின்னக் குட்டியாறு 2 இல் இருந்து தண்ணீர் குழாய் மூலம் சின்னக் குட்டியாறு 1 இல் இணைகிறது. சின்னக் குட்டியாறு அணையிலிருந்து நீரேற்றும் பம்ப் மூலம் மேல் கோதையாறு அணைக்கு தண்ணீர் ஏற்றப்படுகிறது.   இந்த  3 அணைகளும் நிரம்பும் போது அவைகளின் மறுகால் தண்ணீர் மலைப் பகுதிகள் வழியாக பேச்சிப்பாறை அணைக்கு வருகிறது.

மேல் கோதையாறு அணையிலிருந்து குழாய் மூலம் கீழ் கோதையாற்றிலுள்ள மின் நிலையங்களுக்குத்  தண்ணீர் வருகிறது. இதில் மின் நிலையங்கள் இயக்கப்பட்ட பின் அங்கிருந்து  வெளியேறும் தண்ணீரும் பேச்சிப்பாறை அணைக்கு வருகிறது.  இங்கிருந்து கிழ்கோதையாறு அணைக்கு செல்ல வின்ச் போகிறது.  மின்வாரிய உயர்அதிகாரிகளுக்கு மட்டும்தான் இதில் செல்ல அனுமதி. கிழ்கோதையாறு அணைக்கு பஸ்ஸில் செல்லவேண்டும் என்றால் நாகர்கோவிலிலிருந்து தான் செல்ல முடியும். இங்கு குறிப்பிட்ட ஓரிரு பேருந்துகள் மட்டுமே இங்கு செல்கின்றன. நெல்லையிலிருந்து குதிரைவெட்டி செல்லும் பேருந்து மாஞ்சோலையில் நின்று செல்லும்.

No comments:

Post a Comment

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*. Learn that the simplest of times brings the grandest of pleasures ...