Friday, January 19, 2018

உச்ச நீதிமன்றம் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்

உச்ச நீதிமன்றம் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
————————————
டெல்லியில்,உச்ச நீதிமன்றத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் நீதிபதிகள் அனைவரும் மதியம் ஒன்றாக உணவு உட்கொள்வது வாடிக்கை நிகழ்வு. நேற்று புதன்கிழமை என்பதால் சர்ச்சைக்குரிய நீதிபதிகள் மற்றும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஆகியோர் அமர்ந்து பேசி நல்ல முடிவை எட்டுவார்க்கள் என எதிர்பார்த்த வேளையில்; நான்கு நீதிபதிகளில் ஒருவரான செலமேஸ்வர். உடல்நலம் சரியில்லை என அலுவல்பணியில் நேற்று ஈடுபடவில்லை.

இன்னிலையில் இன்று கிடைக்கும் தகவல்கள் நல்லதொரு முடிவை நோக்கி நகரும் என்ற நம்பிக்கை அளிக்கின்றது. இன்று காலை அதிருப்தி நீதிபதிகள் குரியன் ஜோசப், ரஞ்சன் கோகேய், மதன் பி லோகுர் ஆகியோர் செல்லமேஸ்வர் இல்லம் சென்று பேசியுள்ளனர். இதனை தொடர்ந்து நீதிபதிகள் யு.யு.லலித், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரும் நீதிபதி செலமேஸ்வர் இல்லம் சென்று ஆலோசனை நடத்தினர். அந்த சந்திப்புகளில் தலைமை நீதிபதிகள் பணி ஒதுக்கீடு செய்வது குறித்த முடிவுகளில் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக செயல்பட வேண்டும் என அதிருப்தி நீதிபதிகள் கூறியுள்ளதாகவும் அதற்கு தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா அவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிகின்றது. நாட்டின் மூன்றாவது தூண் ஆரோக்கியமானதாகவும் நம்பிக்கை அளிக்கும் விதமாகவும் இருக்க வேண்டும் என்பது நேர்மையான ஒவ்வொருவருடைய விருப்பமும் ஆகும்.

Image may contain: 6 people, eyeglasses and beard

*கே. எஸ். இராதாகிருஷ்ணன்*
18-01-2018

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...