Friday, January 26, 2018

B.N.Rau

இன்று 69வது  குடியரசு தின விழா. இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை நமக்கு நாமே வழங்கி ஏற்றுக் கொண்ட நாள். இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை அமைக்க டாக்டர். அம்பேத்கர் மூல காரணம். அந்த அரசியல் சாசனத்தை தெளிவாக எழுத இன்னொருவர் முக்கிய காரணம். அவர் பெயரே வெளிச்சத்துக்கு வரவில்லை. அவர் இல்லாவிட்டால் அரசியல் சாசனத்தையே படைத்திருக்க முடியாது என்று அம்பேத்கரே சொல்லி இருக்கிறார். அவர் யாரென்றால் ஆந்திராவைச் சேர்ந்த பி.என்.ராவ் ஆவார். 

குடியரசு தின விழாவைக் கோலாகலமாக கொண்டாடுகிறோம். அதன் அர்த்தம் கூட ஒரு சட்டமன்ற உறுப்பினருக்குத் தெரியவில்லை. குடியரசு தினத்தில் கொடியேற்றி மிட்டாய் கொடுப்பார்கள் என்றளவில் பேசியவருக்கு இன்றைய தினம் இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை ஏற்றுக் கொண்ட நாள், விடுதலை நாள் என்பது இந்தியா விடுதலை பெற்ற நாள் என்று விளக்க வேண்டியதாகிவிட்டது.  அம்பேத்கர் பி.என்.ராவ் குறித்து பேசிய ஆங்கில வார்த்தைகள் வருமாறு. 

“The credit that is given to me does not really belong to me. It belongs partly to Sir B. N. Rau, the Constitutional Adviser to the Constituent Assembly who prepared a rough draft of the Constitution for the consideration of the Drafting Committee. A part of the credit must go to the members of the Drafting Committee who, as I have said, have sat for 141 days and without whose ingenuity of devise new formulae and capacity to tolerate and to accommodate different points of view, the task of framing the Constitution could not have come to so successful a conclusion. Much greater, share of the credit must go to Mr. S. N. Mukherjee, the Chief Draftsman of the Constitution. His ability to put the most intricate proposals in the simplest and clearest legal form can rarely be equalled, nor his capacity for hard work.’’।
#Constitution
#ConstituentAssembly
 #
,
#குடியரசு_தின_விழா
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
26-01-2018

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...