Thursday, January 11, 2018

“சிவராசன் டாப் சீக்ரெட்" நூல் வெளியீட்டு விழா

எங்கள் கரிசல் மண்னின் மைந்தன் மதுரை மத்திய சிறை ஆயுள் சிறைவாசி இரா.போ.இரவிச்சந்திரனின் “சிவராசன் டாப் சீக்ரெட்" நூல் வெளியீட்டு விழா.
சிறைவாசி இரவிச்சந்திரன் இந்த நினைவுகளைச் சொல்ல அதை அவருடைய மதுரை வழக்கறிஞர் திருமுருகன் நினைவில் கொண்டு அதை பத்திரிக்கையாளர் ஏகலைவனிடம் சொல்லி அவரால் தொகுக்கப்பட்ட நூல்.
இராஜீவ் படுகொலையில் சம்மந்தப்பட்ட சிவராசனும், சுபாவும் உன்மையான விடுதலைப்புலிகள் இயக்கத்தினைச் சார்ந்தவர்கள் அல்ல என்றும், விடுதலைப் புலிகளால் தண்டிக்கப்பட்ட மாத்தையா சொல்லி இராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தார்கள் என்ற கருத்து தெரிய வருகிறது. பிரபாகரனுக்குத் தெரியாமலேயே இந்த சதி நடந்துள்ளது. பழி ஓரிடம், பாவம் ஓரிடம். இந்த கோணத்தில் ஆராய வேண்டும். அப்பாவிகள் என்றைக்கும் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது.
திரு.ரவிசந்திரன் ராஜீவ் கொலைவழக்கில் கைது செய்து #27ஆண்டுகள் கடந்த நிலையில் தான் சிறைசாலையில் பணிபுரிந்த தொகையை லண்டன் ஹார்வர்டு பல்கலையில் அமைய உள்ள தமிழ்இருக்கைக்கு வழங்கி உள்ளார்.
வெளிகாற்றை கூட சுவாசிக்க முடியாத ரவிசந்திரனின் இந்த செயல்
பாராட்டிக்குரியது

ஊடக வெளிச்சம் கூட இவருக்கு இல்லை.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...