Monday, July 18, 2022

கடந்த நாட்கள் நினைவுகள் சில….

உழுது பயிரிட்டு உணவு தானியங்களை குடும்பத்திற்கு தேவையான பொருட்கள்  நெல் பயிரு உளுந்து. மஞ்சள் மிளகாய் கத்திரி  சிறுகிழங்கு   கருனைகிழங்கு புளி மாங்காய் தேங்காய் இவைகள் உற்பத்தி செய்தோம் எங்கள் பயன்பாட்டுக்கு போக உபரியானதை விற்பனை செய்து குடும்பம் நடத்தப்பட்டது.
    விவசாயிகளின் வீட்டில் பசு மாடுகள் எருமைமாடுகள் .பால்வளம் மிகுந்த ஊர்கள்.ஆடுஇருந்தது.பாரைவண்டி வில்வண்டி வண்டி மாடுகள் உழவு மாடுகள் விவசாய உபகரணங்கள் அனைத்தும் இருந்து
     அணிந்துகொள்ள நான்கு முத்தின் வேட்டி துண்டு  அழுத்தமான சட்டை புடவையில் திருமணச் சடங்கில் பட்டுப்புடவை பட்டுவைன்டி பலவகை நெசவு செய்யும் ஊர்ப்பெயர் களை கொன்ட புடவைகள் அணி மணிகள் என செழிப்போடு வாழ்ந்து வந்தனர். தெருக்கள் சாலைகள் மண்தான் ஆறுகளில் பாலங்கள் கிடையாது . சில முக்கிய தெருக்களில் மட்டும் இருங்கள் தூண் அதன் மேல் அணைந்திடாத தடுப்புத்தகரம் வைத்த விளக்குகள் .இதோடு ஊரைச் சுற்றி பலவகையான பசுமையான உயரமான மரங்களால் சூழப்பட்ட கிராமங்கள் .நீர் நிறைந்த குளங்கள்அல்லி தாமரை பூத்த தடாகங்கள்.குளக்கரையில் வழிபாட்டு கோயில்கள் அமைதியான ஆனந்தமான கிராமங்களில் வளர்ந்தோம்.



நாட்கள் செல்லச் செல்ல  கிராமிய சூழ்நிலையில் வாழும் நாங்கள்  கிராமத்தில் உள்ள பெரியவர்கள் குடும்பத்தினர் உறவினர்கள் முறைவைத்துக்கூப்பிடும் தாத்தா பாட்டி அண்ணன் தம்பி அக்கா தங்கை மாமா மச்சான் என தாய்தந்தையாள் எடுத்துச்சொல்லி அதன் வழியே உறவுகளோடு கூடிய மகிழ்ந்து வளர்ந்து வந்தோம்.

No comments:

Post a Comment

hhhhhhh

hhhhhhh