Sunday, June 4, 2023

#*தமிழகத்தில் , சிலரயில்விபத்துக்கள்*.

#*தமிழகத்தில் , 
சிலரயில்விபத்துக்கள்*.,
—————————————
1)ஒடிஷா விபத்தை போல 42 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் மோதிய 3 ரயில்கள்-உயிர் தப்பிய எம்.ஜி.ஆர் வாணியம்பாடி ரயில் விபத்து.

2) 1964 டிசம்பர் 23: ராமேஸ்வரம் புயல் காரணமாக பாம்பன்-தனுஷ்கோடி பயணிகள் ரயில் விபத்தில் சிக்கியதில் 126 பேர் உயிரிழந்தனர். வங்க கடல் ஜன சமுத்திரம் ஆனது.இந்த ரயில் மார்க்கம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரயில் போக்குவரத்திற்காக மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு 1914 பிப்ரவரி 24 ஆம் தேதி போர்ட் மெயில் ரயில் தனது முதல் பயணத்தைத் தொடங்கியது. தொடர்ந்து தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்தும் தொடங்கப்பட்டது. சென்னை எழும்பூர் நிலையத்தில் இலங்கை பயண டிக்கெட் அன்று வாங்கலாம்.

3) அரியலூர் இரயில் விபத்து -)
ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி பதவி விலகல். 1956 நவம்பர் 23-ல் நடந்தது. 
உயிரிழப்பு இந்த விபத்தின் காரணமாக இரயில் எஞ்சினுடன் இணைக்கப்பட்டிருந்த பல பெட்டிகள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டதால் 142 பயணிகள் மரணமடைந்தனர். 110 பயணிகள் காயமடைந்தனர் மற்றும் 200 பயணிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அரியலூர் அழகேசா நீ ஆண்டது போததா.?மக்கள் மாண்டது போததா.?
அப்போது அழகேசன் ராஜாங்க ரயில்வே மந்திரி.

#பாம்பன்_தனுஷ்கோடி_பயணிகள்_ரயில்_விபத்து 

#அரியலூர்_இரயில்_விபத்து -
#வாணியம்பாடி_ரயில்_விபத்து.

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
4-6-2023.

No comments:

Post a Comment

*Confident Walking is more Successful than Confused Running*.

*Confident Walking is more Successful than Confused Running*. Confidence doesn't come when you have all the answers. Be brave to live fr...