Thursday, August 22, 2024

காரணமாக அமையக் கூடும்

 இன்றைய அளவு கடந்த சிரிப்பு 

நாளைய அளவு கடந்த அழுகைக்கு 

காரணமாக அமையக் கூடும்


இன்று அளவு கடந்து

எடுத்துக் கொள்ளப் படும் சலுகை 

நாளைய இறுக்கங்களுக்கு

காரணமாக அமையக் கூடும் 


இன்றைய வரம்பு மீறல்கள் 

நாளைய சந்தோஷங்களை 

தடுக்கும் அரணாக அமையக் கூடும் 


இன்று இடைவிடாது

தொடரப்படும் பிடிவாதங்கள்

நாளைய பிரிவுக்கு 

காரணமாக அமையக் கூடும் 


இன்றைய அளவு கடந்த 

இறுக்கத்தின் நிழல்

நாளைய நிழலின்மைக்கு

காரணமாக அமையக் கூடும் 


ஆதலால் தான் எதுவும் 

அளவோடிருத்தலே நலம்

எல்லை தாண்டப் படாத வரையே நலம் 

வரம்பு மீறாதிருக்கும் வரையே நலம் 


அது சந்தோஷமாகட்டும்

சோகமாகட்டும்

சோதனையாகட்டும்

அல்லது நீ

துவண்டு போய் கிடக்கும் 

நொடியாகட்டும்


அளவோடு இரு

அல்லல்கள் குறைக்கப்படும்!


@trendingtopic09

 

@trending

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...