Tuesday, January 21, 2025

#அரிட்டாபட்டி #இந்துஸ்தான்டங்ஸ்டன்தொழிற்சாலை #Tungstenmining_Arittapatti,

 #அரிட்டாபட்டி




———————————————————-
முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தின் மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் இந்துஸ்தான் டங்ஸ்டன் தொழிற்சாலையை சுற்றுச்சூழல் கருதித் தடுத்து நிறுத்துமாறு பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
நல்லது! இதில் கேள்வி என்னவெனில் மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமல் மாநில அரசுகளின் அனுமதி பெறாமல் மற்றும் தொழிற்சாலைக்கான இட ஒதுக்கம் போன்றவற்றையெல்லாம் முன்கூட்டி தெரிவித்து ஏற்பாடுகள் 2023 அக்டோபரில் ஸ்டாலின் திமுக ஆட்சி செய்து தந்த பின்பு தானே மத்திய அரசு இதற்கு அனுமதி அளித்திருக்கும்! அப்புறம் என்ன இப்படி மறுப்பு கடிதம்!
இது என்ன பம்மாத்து வேலையா?! இல்லை உண்மைதானா!?
2006 முதல் 11 வரை துணை முதல்வராக ஸ்டாலின் இருந்தபோதுதானே டெல்டா பகுதிகளில் மீத்தேன் வாயு எடுப்பதற்கு MOU அனுமதி அளித்தார்! அதற்கு எம் ஓ யு போட்ட வரே இவர்தான். தூத்துக்குடி
ஸ்டெர்லைட் ஆலை (Sterlite Industries விரிவாக்க திட்டத்துக்கு நிலம் அளித்தது பிறகு அதை இவரே எதிர்க்கவும் தொடங்கினார்.
அதேபோல் நீட் தேர்வுக்கான முறை இவரது துணை முதல்வர் காலத்தில் தான் வந்தது. இவற்றை கையெழுத்து போட்டு நிறைவேற்றிவிட்டு பிறகு அதையே ஒப்புக்கு எதிர்த்துப் போராடவும் செய்கிறார். பிள்ளையைக் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுவது வழக்கம் ஆகிவிட்டது!. எப்படி எல்லாம் தான் மக்களை முட்டாள்களாக்குகிறார்கள்!
அரிட்டாபட்டியில் 280 வகையான பறவை இனங்கள், அரிய வகை தேவாங்குகள், எறும்புதின்னி, மலைப்பாம்பு, 700-க்கும் மேற்பட்ட பூச்சி இனங்கள் இம்மலையில் வசிக்கின்றன. அதனால்தான் அரிட்டாபட்டியை பல்லுயிர்ப் பாரம்பரிய சூழல் தலமாக கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.
இந்தப் பெருமை ஒரு பக்கமென்றால், 2200 ஆண்டுகளுக்கு முந்தய தமிழி கல்வெட்டுகள், சமணர் படுகைகள், சங்க காலக் கற்படுக்கைகள், குடைவரைக் கோயில்கள் என தனித்துவமான அடையாளங்களுடன் தமிழர்களின் பண்பாட்டைத் தாங்கி நிற்கும் தொட்டிலாகவும் அது விளங்குகிறது. சமணத் தடமாகவும் முக்கியமானது அரிட்டாபட்டி மலைகள்.
முல்லைப் பெரியாறு நீரால் ஆண்டு முழுவதும் விவசாயம் நடைபெறுவதால், இப்பகுதி கிராமங்கள் செழிப்பாக விளங்குகின்றன. பல்லுயிர்ப்பெருக்க தங்குமிடமாகவும், இயற்கையின் அதிசயங்களும் தமிழர் பண்பாட்டின் படிமங்களும் நிறைந்துள்ளதாகவும் உள்ள அரிட்டாபட்டி, அதைச் சுற்றியுள்ள தெற்குத் தெரு, முத்துவேல்பட்டி, குளனிப்பட்டி, கிடாரிப்பட்டி, எட்டிமங்கலம், வெள்ளாளப்பட்டி, சிலீப்பியாபட்டி, செட்டியார்பட்டி, நாயக்கர்பட்டி என 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள், தற்போது நிம்மதி இழந்து பதைபதைத்துக் கிடக்கின்றனர்.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்