Thursday, June 4, 2015

அப்புராணியான விவசாயிக்கு ஒரு நீதி, வங்கிப்பணத்தை விழுங்கிய கிங்பிஷர் குண்டு மல்லையாவுக்கு ஒரு நீதியா?



   நரைத்த முடியுடன் தொப்பையோடு, அடைகுறை பெண்களை அணைத்துக்கொண்டு படங்களில் காட்சி தரும் கிங் பிஷர் மல்லையா, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்கி ஏப்பம் விட்டுவிட்டார்.  அரைகுறை ஆடையுடன் பெண்களைக் கொச்சைப் படுத்தும் மாதாந்திர காலண்டர் ஒன்றை பத்தாயிரம் ரூபாய் செலவு செய்து இலவசமாக வினியோகிக்கும் இவர் வங்கியிடம் வாங்கிய கடனைக் கட்ட முடியவில்லையாம்.

சாதாரண விவசாயி பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கினால், ஜப்திகளும், வங்கி அதிகாரிகள் விவசாயியின் வீட்டுக்கு வந்து கொடுக்கும் தொல்லைகள் சொல்லி மாளாது.

படிக்கும் மாணவர்களுக்குக் கல்விக்கடன் என்று விளம்பரப்படுத்திக் கொண்டு ஏழை சாலைமாணவர்கள் கடன் உதவியே பெறவிடாமல் வங்கிகல் இழுத்தடிப்பதும். அப்படியே கடனைத் திருப்பிச் செலுத்த காலதாமதமானால் அவர்களைப் படுத்தும் பாட்டையும், கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் படங்களை பொது இடத்தில் பதாகை வைத்து அவமானப்படுத்தும் வேலையும் நடக்கிறது.

சாதாரண மக்களுக்கு இவ்வளவு தொல்லை கொடுக்கும் அரசும், வங்கிகளும் ஏன் மல்லையாவிடம் கடுமைகாட்டத் தயங்கிவது ஏன்?.
இதையெல்லாம் நினைத்தால் கூத்தடிக்கின்றார்களா அல்லது  நியாயங்களை புதைகுழிக்குத் தள்ளுகிறார்களா என்பதுதான் வினா!

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
04-06-2015.



வங்கிகள் படுத்தும் பாட்டைப்பற்றி கண்ணில் பட்ட பதிவு.

******

கிங்பிஷர் நிறுவனத்திடம் இருந்து கடனை திருப்பி வாங்க முடியும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டோம்!
--- United Bank of India.

விடுங்க சார்!  எவனாவது ஏழை விவசாயி கறவை மாட்டுக்கோ, கலப்பைக்கோ கடன் வாங்கி இருப்பான் அவன torture பண்ணி புடுங்கிக்கலாம்!

அப்படி இல்லன்னா, லட்சக்கணக்குல என்ஜினீயரிங்குக்கு
செலவு பண்ண முடியாம ITI யோ, பாலிடெக்னிக்கோ முடிச்சிட்டு எவனாவது லேத் பட்டறை வச்சிருப்பான் அதை ஜப்தி பண்ணி ஏலம் விட்டா போச்சி!!

மானங்கெட்டவங்களா....எவனாவது ஒரு ஏழை மாணவன் தொழில் பண்ணணும்னு  certificate டோட லோன் கேட்டு வந்தா surety இருக்கா, சொத்து இருக்கா, சொரக்கா இருக்கான்னு எத்தனை கேள்வி கேக்குறீங்க, எத்தனை முறை அலைய வைக்கிறீங்க திருப்பி அனுப்புறீங்க, மல்லய்யான்னா மட்டும் ஆளாளுக்கு போட்டி போட்டுட்டு போய் 1600 கோடி கடன் கொடுத்திருக்கீங்க!

அப்போ எங்க போச்சி இந்த surety, சொரக்கா எல்லாம்!? திருப்பி தரக்கூடிய அளவிற்கு நிரந்தர சொத்து இல்லாத, தொடர்ந்து நஷ்டத்துல மட்டுமே இயங்கிட்டு இருக்கிற ஒரு நிறுவனத்திற்கு எந்த அடிப்படையில ஆயிரக்கணக்கான கோடி business லோன் கொடுத்தீங்க!? பணக்காரனோட jockey ஜட்டி கிடைக்கலன்னா ஏழைங்க கோவணத்தை உருவிடலான்னு தானே!?

பாவம் நீங்க என்ன பண்ணுவீங்க, மல்லய்யா flight ஓட்டறதுக்கு லோன் கொடுத்திருந்தா பரவால்ல, இப்படி கூத்தடிக்கவும், ஐபிஎல் கிரிக்கெட்டுல கோடிகளை இரைக்கவும் தானே கடன் கொடுத்தீங்க.

அந்த 400 கோடியை வாராக்கடன்னு கணக்க முடிச்சிட்டு,
Atm card க்கு ஒரு charge,
அதுல A.C போட்டதுக்கு
ஒரு charge,
அஞ்சு முறைக்கு மேல
use பண்ணா அதுக்கு
ஒரு charge ன்னு சாதாரண ஜனங்க ரத்தத்தை உறிஞ்சுங்க. எந்த நாதி எதிர்த்து கேக்கபோகுது உங்களை...

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...