Saturday, December 24, 2016

சாகித்திய அகாடமி விருது

சாகித்திய அகாடமி விருதுகளை திரும்ப திரும்ப திருநெல்வேலியே அள்ளிக்கொண்டு வருகிறது . 
-------------------------------------
கன்னித் தமிழ் பிறந்த பொதிகையும் அதன் தென்றலும் , வீரத்தை ஊட்டிய பொருணை ஆற்றின் சுவை நீரும்,சலிக்காத உழைப்பை திணித்த வானம்பார்த்த கரிசல் மண்ணின் வேகாத வெயிலும் நெல்லை சீமையின் அடையாளங்கள் . நாகரீகத்தின் பிறப்பிடம்;பழைமையும் , தொண்மையும் , காட்டுகின்ற பூமி  நெல்லை பூமி . இலக்கியத்தில் எத்தனையோ கர்த்தாக்களை நெல்லை உருவாக்கியது . தமிழகத்தில் சாகித்திய அகாடமி விருதுகளை திரும்ப திரும்ப எங்கள் திருநெல்வேலியே அள்ளிக்கொண்டு வருகிறது . 

ரசிகமனி டிகேசி , ரா.பி .சேதுப்பிள்ளை , பி . ஸ்ரீ ஆச்சார்யா , அ . சீனிவாச ராகவன் , மீ.பொ .சோமு , கு.அழகிரிசாமி  , ஆதவன் ,தொ.மு.சி ரகுநாதன் . சமுத்திரம் , 
கி. ராஜநாராயணன் , வல்லிக்கண்ணன் ,  தோப்பில் முகமது மீரான் , தி.க .சிவசங்கரன், பூமணி,ருத்ர துளசிதாஸ் இவர்களை தொடர்ந்து தற்போது வண்ணதாசன் அவர்களும் சாகித்திய அகாடமி விருதினை பெற்றுள்ளார் . இப்படி ஒரு நீண்ட பட்டியலே உண்டு . தமிழ்பணிக்கு சுவடுகளை பதித்த அகத்தியர்லிருந்து இன்றைய களனியூரான் வரை ஆயிரத்திற்கு மேலான ஆளுமைகளும் நெல்லையின் அருட்கொடை . 

இதில் கவனிக்கத் தக்க செய்தி என்னவென்றால் ராஜவள்ளிபுரம்  ஊரை சேர்ந்த ரா .பிசேதுப்பிள்ளையும் ,வல்லிக்கண்ணனும்  இடைசெவல் என்ற குக்கிராமத்தை சார்ந்த 
கு . அழகிரிசாமியும் , ராஜநாரயணனும் இந்த விருதினை பெற்றுள்ளனர் 
ஒரே ஊரை சார்ந்தவர்கள் விருதுகள் பெறுவது என்பது தமிழகத்தில் மற்ற மாவட்டங்கள் மற்றும் ஏன் அகில இந்திய அளவிலும் வேறு எங்கும் இப்படி ஒரு பெருமை பெற்றது கிடையாது .

மேலாண்மை பொன்னுசாமி விருதுநகர் மாவட்டம் என்றாலும் அவருடைய கிராமம் மேலாண்மை மறைநாடு நெல்லை சீமையின் வடக்கு எல்லையில் தான் உள்ளது . இதற்காக பெருமை படுகின்றோம் .எதோ ஒன்று மனதிற்குள் மிகப்பெரிய காயமாக உள்ளது ;என்னவென்றால் ஞான பீட விருது மட்டும் நெல்லை மாவட்டத்திற்கு எட்டாக்கனியாகவே  உள்ளது  என்று வருத்தமாக உள்ளது  .

அகிலன் ,ஜெயகாந்தனுக்கு பிறகு தமிழ் இலக்கியத்திற்கு ஞானபீடம் கிடைக்கவில்லை . 1987 ல் நா . பார்த்சாரதிக்கு கிடைத்திருக்க வேண்டிய ஞானபீட விருதும் தட்டிவிட்டது .ஞான பீட விருது நெல்லைக்கு கிடைக்கவேண்டும் என்று இயற்க்கையை இறைஞ்சுகிறோம்  !

#சாகித்தியஅகாடமி 
#நெல்லை 
#திருநெல்வேலி

கே.எஸ் .இராதாகிருஷ்ணன்
24/12/2016
#ksrposting
#ksradhakrishnanposting

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...