Friday, December 9, 2016

அரசியல் - Politics

"தாடிகள் எல்லாம் தாகூரா மீசைகள் எல்லாம் பாரதியா வேஷத்தில் ஏமாறாதே தோழா"

இன்றைய தமிழ் இந்துவில் 09/12/2016 ல் அதிமுகவில் என்னென்ன சாதியை சார்ந்த எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள் என்று பட்டியல் போட்டுள்ளனர் .

அது;அதிமுக எம்எல்ஏ க்களின்
சாதிவாரிப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

தலித்துகள்....31
கவுண்டர்.......28
முக்குலத்தோர்.....20
வன்னியர்..........19
இதரசாதிகள்....34
ஆதிவாசி...........3

மொத்தம்.......135 
சாதி அரசியல்  ஒழிக;மத அரசியல்  ஒழிக.

சாதி ஜனநாயகத்தை தீர்மானிக்கிறது என்ற நிலைமை வந்துவிட்டது . #அரசியலில் மக்கள் பணி , தியாகம் , அர்பணிப்பு , நேர்மை , அனுபவங்கள் எதுவும் வேண்டாம்.எம்.பி ,எம்.எல்.ஏ போன்ற பதவிகள் எந்த உழைப்பும் இல்லாமல் கிடைத்துவிடுகிறது . அரசியலில் கொள்கையோடு இருப்பவர்கள் உழைத்துக்கொண்டே இருக்கிறாரகள் . அதுமட்டுமல்லாமல் கோடம்பாக்கத்தில் இருந்து  நேரிடையாக அரசியலில் இறங்கி விடலாம்.பொதுவாழ்வில் எந்த கொள்கையும் உழைப்பும் தேவையில்லை  இந்த அரசியல் தான் மக்களுக்கும் பிடித்து விட்டது என்ன செய்ய ?
..............
நமது போராட்டங்களின் வாசகங்கள் பாதிக்கப்பட்டவர்களின் மொழியில் இருக்க வேண்டுமே தவிர, பலசாலிகளின் மொழியாக அமைந்து விடக்கூடாது...
..................
உண்மை  எப்போதும் அமைதி
குணம் கொண்டது.

கே.எஸ் .இராதாகிருஷ்ணன்
17/12/2016
#
அரசியல்
#politics
#ksrposting
#ksradhakrishnanposting

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...