Thursday, July 27, 2017

புலிகள் மீதான தடை வழக்கு தொடர்பாக வெளியான தீர்ப்பின் கூறுகள்

புலிகள் மீதான தடை வழக்கு தொடர்பாக வெளியான தீர்ப்பின் கூறுகள்: 
-------------------------------------
விடுதலைப் புலிகள் இயக்கம் மீது 2006-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து 2011-ல் லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய கீழ் நீதிமன்றத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் 2014-ல் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றமானது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கியது. ஆனால் இங்கிலாந்தும், நெதர்லாந்தும், ஐரோப்பிய கவுன்சிலும் 28 நாடுகளைக் உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அந்த வழக்கின் தீர்ப்பே நேற்று வெளிவந்நது. இதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகளை நீக்கியுள்ளது. 

மேல் முறையீடு தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் சில அம்சங்கள்.

1. கடந்த 2014ம் ஆண்டு கீழ்நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பிலேயே, "தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 2009-ம் ஆண்டுக்குப் பின்னர் எந்த ஒரு பயங்கரவாத தாக்குதல்களிலும் ஈடுபடவில்லை. விடுதலைப் புலிகள் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் தாக்கல் செய்யவில்லை" என கூறியுள்ளது.

2. புலிகள் அமைப்போ புலிகளின் பிரதிநிதிகளோ 2011ம் ஆண்டுக்கு பிறகும் எவ்வித சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடவில்லை. எனவே 2011ம் ஆண்டு தடை நீட்டிற்பிற்கான ஐரோப்பிய கவுன்சிலின் வரைமுறை செல்லாது.

3. மேலும் 2011-2014 புலிகள் தரப்பில் வழக்கிற்கு செலவு செய்ததை ஐரோப்பிய கவுன்சிலே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஐரோப்பிய கவுன்சில் வழங்கிய மூன்றாம் நாடு (இந்தியா) தொடர்பான ஆவணங்களை இந்த நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. 

4. இந்த வழக்கின் பொழுது 2011 ம் ஆண்டு முதல் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களும் இணையதளத்தில் / ஊடகத்தில் வந்த செய்திகளின் அடிப்படையிலானது. ஐரோப்பிய நீதி எல்லையில் குற்றச்செயலுக்கான எவ்வித சாட்சியமும் இவர்கள் கொடுக்கவில்லை. 

5. ஐரோப்பிய கவின்சிலில் 2011ம் ஆண்டில் நீட்டித்த தடையை மட்டுமே நீக்கியுள்ளது. ஆனால், 2006 இல் ஐரோப்பிய பாராளுமன்றம் சட்டம் இயற்றிய புலிகளின் தடை உத்தரவை இன்னமும் நீக்கவில்லை. இரண்டும் வெவ்வேறும் வடிவத்திலான ஐரோப்பிய ஒன்றிய அமைப்பு.

6. இந்த தீர்ப்பின் மூலம் 2011 - 2015 காலக்கட்டத்தில் புலிகளின் பணமோ சொத்தோ முடக்கப்பட்டிருந்தால் அது மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளது.

7. இத்தீர்ப்பை ஐரோப்பிய கவுன்சில் நேரடியாக நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. தனிச் சட்டம் கவுன்சிலிலோ பாராளுமன்றத்திலோ இயற்றத் தேவையில்லை. 

8. இன்னும் முழுமையாக ஐரோப்பிய ஒன்றிய அமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறாததால் அதனையும் இத்தீர்ப்பு கட்டுப்படுத்துகிறது. ஆனால், 2001 ம் ஆண்டிலேயே இங்கிலாந்து இயற்றிய புலிகள் மீதான தடை சட்டத்தை கட்டுப்படுத்தாது.

தீர்ப்பின் நகலை இந்த இணைப்பில் காண்க. https://goo.gl/Y4QDZg

#விடுதலை_புலிகள்_மீதான_தடை_நீக்கம்
#ஐரோப்பிய_யூனியன்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
27-07-2017

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...