Thursday, July 6, 2017

“தமிழகத்திற்கு பெருமை சேர்த்த அகஸ்தியர் மலை”: யுனெஸ்கோ சான்றிதழ்

“தமிழகத்திற்கு பெருமை சேர்த்த அகஸ்தியர் மலை”: யுனெஸ்கோ சான்றிதழ்..,

தமிழகத்தில் உள்ள #அகஸ்தியர்மலையை பெருமை படுத்தும் விதமாக உயிர்க்கோள் காப்பக பகுதி என ஜ.நா.,வின் யுனெஸ்கோ சான்றிதழ் வழங்கியுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு பெரு நாட்டில் ஜ.நா.,வின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் உயிர்கோள் காப்பகப் பகுதியாக 20 இடங்களை அறிவித்தது. அதில், தமிழகத்தில் உள்ள அகஸ்தியர் மலையும் இடம்பெற்றது.

இந்த மலையானது, 1672 ச.கி.மீ. தமிழகத்திலும், 1828 ச.கி.மீ. கேரளாவிலும் பரந்து விரிந்துள்ளது. இதில், மொத்தம் 26 சிகரங்களும், தாமிரபரணி, கரமனா, நெய்யார் போன்ற ஆறுகளும் உற்பத்தியாகின்றன.

இங்கு, 2000-க்கும் அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகைத் தாவங்கள் இருக்கிறது. இவ்வளவு பெருமை வாய்த இந்த மலையை #யுனெஸ்கோ உயிர்க்கோள் காப்பக பகுதி என்று பெருமை படுத்தியுள்ளது.

ஏற்கனவே, நீலகிரி, சுந்தரவன காடுகள், மன்னார் வலைகுடா உள்ளிட்ட பகுதிகளும் யுனெஸ்கோ பட்டியலில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அகஸ்தியர்மலை_யுனெஸ்கோ_சான்றிதழ்.
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
06-07-2017


No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...