இந்த படத்தில் இருக்கும் *#வஉசி (வண்டானம் உலகநாதன் சிதம்பரனார்)* பூர்வீக வீடு. இந்த வீடு தெற்கு வண்டானம் கிராமத்தில் இருக்கிறது. இந்த கிராமம் கோவில்பட்டி வட்டத்திலும், கயத்தாறு ஒன்றியத்திலும் அமைந்துள்ளது.
நேற்று (16-5-2019) அந்த கிராமத்திற்கு நண்பரின் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றபோது, வ.உ..சியின் பூர்வீக ஊர் இதுதான் என்று அழைத்துச் சென்று காட்டினார்கள். அவரது வீடு இப்படி மோசமாக, புதரும், செடிகள். மொட்டைச்சுவராக இருக்கிறது . அந்த வீடும் தற்போது கைமாறிவிட்டது.
அதேபோல, பசுவந்தனையில் உள்ள தன்னுடைய நிலத்தைகோவிலுக்கு எழுதி வைத்ததும் கைமாறிவிட்டதாக சொன்னார்கள். காமராஜர் காலத்தில் 7-8-1957ல் ல் ஒட்டப்பிடாரத்தில் உள்ள அவருடைய வீட்டை நாட்டுடமை ஆக்கப்பட்டாலும் இந்த பூர்வீக வீட்டை பார்க்கவே வேதனையாக இருந்தது.
செல்வந்தராக பிறந்து இறுதி காலத்தில் எல்லாமும் இழந்து வறுமையில் வாடிய வ.உ.சியை இந்த இடத்தை பார்க்கும்போதே அவர் எவ்வளவு ரணத்தோடு வாழ்ந்திருப்பார் என்று மனதில் படுகிறது. கஷ்டமான நிலையில்வ.உ.சி அவர்கள் கோவில்பட்டியில் வாழ்ந்ததும், ஒட்டப்பிடாரம், வசித்ததை குறித்தும் விரிவாக பதிவுசெய்கிறேன்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
17-05-2019
No comments:
Post a Comment