Tuesday, May 21, 2019

ஒரு விளக்கம்.

ஒரு விளக்கம்.
-----------------
முள்ளிவாய்க்கால் துயரங்களைக் குறித்து என் சமூகவலைத்தளங்களில் ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தல் பணிகளுக்கிடையே இதயசுத்தியோடு பதிவுசெய்தேன். என்னுடைய உதவியாளரிடம் இதற்கேற்றவாறு ஒரு புகைப்படத்தை வைக்கவும் என்று சொல்லியிருந்தேன். அவர் தவறான படத்தை வைத்துவிட்டார். அது தெரிந்தவுடன் அதை நீக்கிவிட்டேன்.

என்னுடைய சமூக வலைத்தளங்களில் கடந்த மூன்று, நான்கு நாட்களாக இட்டுவரும் பதிவுகளை பார்த்தாலே அனைவருக்கும் புரியும். தேவையில்லாத சர்ச்சைகளுக்கு வருந்துகிறேன். என்னுடைய நிலைப்பாடு என்றும் ஒன்றுதான். தமிழ் ஈழம் என்பதில் மாறுபட்ட கருத்து எந்நாளும் இல்லை. கடந்த சில நாட்களின் எனது பதிவுகளை பார்த்தாலே என்னுடைய ஈழ அணுகுமுறை தெரியும். தேவையில்லாத குழப்பங்கள் வேண்டாம். உதவியாளரின் தவறுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணனன்.

No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...