Thursday, August 15, 2019

*புதுவையில்கி.ராவுடன் இன்று....* #கிரா97


*புதுவையில்கி.ராவுடன் இன்று....*
——————————————-

இன்று(14-08-2019) மாலை புதுவையில் கி.ரா.வை சந்திக்க சென்றிருந்தேன். கணவதி அம்மாள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர்களை பார்த்து வர சென்றபோது, கி.ரா.வோடு சில பழைய செய்திகளை நினைவு கூர்ந்து பேச முடிந்தது. தமிழ்நாட்டில் நாராயணசாமி நாயுடு தலைமையில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டமும்-துப்பாக்கிச் சூடும், ஸ்தாபனக் காங்கிரசும், இந்திரா காங்கிரசும் 1976இல் சென்னை மெரினாவில் நடந்த இணைப்பு விழா, ஈழத் தமிழர் பிரச்சனை, கரிசல வட்டார விவசாய வேலைகள் என அன்றைய இன்றைய நிகழ்வுகளை அசை போட முடிந்தது.

தொ.மு.சி. ரகுநாதன், வழக்கறிஞர். என்.டி.வானமாமலை, ந.வானமாமலை போன்றவர்களோடு நெல்லையில் அக்கால கம்யூனிஸ்ட் கட்சி இயக்க செய்திகள் மற்றும் ரசிகமணி டி.கே.சி போன்ற பல செய்திகளை விவரித்தார்.
உங்களின நினைவு ஆற்றல் இயற்கை தந்த அருட்கொடை என்று சொன்னேன். ஈழத்தமிழர் பிரச்சனையில் மலையகத் தமிழர்கள் பிரச்சனை குறித்தும் எழுதிக் கொண்டு வருகிறேன் என்றார். சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம் முடிந்து 50 ஆண்டுகள் மேலாகிவிட்டது என்றும், லட்சக்கணக்கான மக்கள் இந்தியாவிற்கு திரும்பி விட்டனர். இந்திய வம்சாவளி தமிழர்களை திருப்பி அனுப்பிய இந்த ஒப்பந்தம் சரியா, தவறா என்றபோது,என்னைப்பொறுத்த
வரையில் அது தவறான ஒப்பந்தம் என்று கி.ரா.விடம் சொன்னேன்.

இன்றும் தெம்போடு மகிழ்ச்சியாக விவாதிக்கும் கிராவின் திறன் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியில் வியந்தேன் மகிழ்ச்சியும் அடைந்தேன்.
தனது திருமணம்,நல்லநேரம் என பார்க்காமல் உச்சி வெயில் நேரத்தில் நடந்தது. வேதங்கள் அந்தணர் விருந்து என எதுவும் இல்லை.சிப்பிபாறை பாறைப்பட்டிகந்தசாமி நாயக்கர் திருமாங்கல்யத்தை எடுத்துக்
கொடுத்தார்.அப்போது கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தேன். டிபி நோயில் சிரம்ப்பட்டேன் என்றார்.

இடைச்செவலிலும், புதுவையிலிலும் வந்தவர்களை உபசரித்து சுவையான நளபாக உணவுகளை படைத்து வழங்கிய கணவதி அம்மாளும் விரைவில் குணமடைய வேண்டும். வரும் செப்டம்பர் 16 கி.ரா.வின் 97வதுபிறந்தநாள். பொடிக்கும், தாடிக்கும்(அண்ணா-பெரியார்) யிடையில் பிறந்தவர் என்று வேடிக்கையாக சொல்வார்கள். அந்த நாள் மாலைப் பொழுதில் புதுவையில் சிறப்பு நிகழ்ச்சியும் இருக்கும் என்று கி.ரா.பிரபியிடம் சொல்லிவிட்டு வந்துள்ளேன்.
#கிரா97
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
14-08-2019
Image may contain: 3 people, people sitting, table and indoor

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...