Thursday, August 29, 2019

#சுஜாதா ஓர்ஆடைதனில் இருந்தாலும்...நல்ல உணவின்றி வாழ்க்கை கழிந்தாலும்... சீரான் தலைவன் திருவடி பணியும் தெய்வப் பிறவி வேண்டுகிறேன்....

#சுஜாதா
ஓர்ஆடைதனில் இருந்தாலும்... நல்ல உணவின்றி வாழ்க்கை கழிந்தாலும்...
சீரான் தலைவன் திருவடி பணியும் தெய்வப் பிறவி வேண்டுகிறேன்...
-------------------------------------------------
திரைத்துறையிலிருந்து முதல்வரான எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், நடிகர் சிவகுமார் ஆகியோரோடு அறிமுகமுண்டு. நடிகைகள் என்றால் தேவிகா, ஸ்ரீவித்யா, சுஜாதாவோடு அறிமுகம். இந்த மூவரினுடைய திரைப்பாடல்களில் சில மனம் கவர்ந்தவை.

சுஜாதா நான் வசிக்கும் கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியில் தனது இறுதிக் காலத்தில் வசித்தார். அவர் 2011இல் காலமாகும் வரை அவ்வப்போது பாலவாக்கம் கடற்கரையில் நடைப்பயிற்சியின் போது சந்தித்ததுண்டு. நடிகை தேவிகா வேதனைகளை சுமந்தார். அதேபோல, ஸ்ரீவித்யாவும், சுஜாதாவும் நல்ல நடிகைகள். இன்னும் சில காலம் வாழ்ந்திருக்கலாம். இயற்கை அவர்களை மரித்துவிட்டது.

கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சுஜாதா, 1952இல் இலங்கை, யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழை என்ற ஊரில் பிறந்தார். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நண்பர் மாவை.சேனாதிராஜாவின் வீட்டின் அருகே தான் இவர் பிறந்த வீடு உள்ளது. அது இனக்கலவரத்தில் 1983இல் சேதாரமானது. அந்த காலத்தில் இந்தியாவில் இருந்து ஆசிரியர்கள் யாழ்ப்பாணம் சென்று பணியாற்றி வந்தார்கள். சுஜாதாவின் தந்தை மேனன் கேரளத்தில் இருந்து தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் விலங்கியல் ஆசிரியராக 1956 வரை பணியாற்றினார். பின்னர் இலங்கையின் தென்பகுதியில் உள்ள காலியில் பணியாற்றினார். 

சுஜாதாவும் அங்கு பத்தாம் வகுப்பு வரை படித்தார். 'போலீஸ் ஸ்டேஷன்' என்ற மலையாள நாடகத்தில் முதன்முதலாக 1971-ம் ஆண்டில் நடித்தார். இயக்குநர் ஜோஸ் பிரகாஷ், 'தபஷ்னி' என்ற மலையாள படத்தில், சுஜாதாவை அறிமுகம் செய்தார். 1972-ம் ஆண்டில், கே. பாலசந்தர் இயக்கத்தில் 'அவள் ஒரு தொடர்கதை' படத்தில் அறிமுகமானார். அந்த படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து சுஜாதா தமிழ் பட உலகில் பிரபலமானார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.

அவர் நடித்த குண்டுமல்லி என்ற படத்தில் இந்த பாடல் எப்போதும் குடும்ப பாசத்தை உணர்த்தும் பாடல்.

அரியதொரு பாடல்...பலரால் அறியப்படாக பாடல்...வாணி ஜெயராம் தேன்குரலில்....
ஓர்ஆடைதனில் இருந்தாலும்...நல்ல உணவின்றி வாழ்க்கை கழிந்தாலும்...
சீரான் தலைவன் திருவடி பணியும் தெய்வப் பிறவி வேண்டுகிறேன்....
பெண்குலத்தை பெருமைப் படுத்தும் பாடல்....
குடும்பப் பாங்கான ...மக்கள் மனதில் நல்ல எண்ணங்களை விதைக்கும் வண்ணம் சிறந்த படங்களை வழங்கிய ...இயக்குநர் திலகம் கே .எஸ். கோபால கிருஷ்ணன் தயாரித்து இயக்கிய அற்புதமான காவியம்...
அடுக்கு மல்லி...
பரவசக் குரலில் மெய் மறந்தேன்...

#நடிகை_சுஜாதா
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-08-2019

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...