Saturday, August 17, 2019

#திருநெல்வேலி மாவட்டம் பிரிப்பதில்.....


திருநெல்வேலி, தென்காசி மற்றும் சேரன்மகாதேவி ஆகிய மூன்று வருவாய்க் கோட்டங்களோடும், 16 தாலுக்காக்களோடும், ஒரு மாநகராட்சியோடும், 6 நகராட்சிகளோடும், 36 பேரூராட்சிகளோடும், 19 ஊராட்சி ஒன்றியங்களோடும், 425 கிராம பஞ்சாயத்துகளோடும் இருந்து திருநெல்வேலி மாவட்டமாக இயங்கி வந்தை பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமாக அறிவித்துள்ளது. 
No photo description available.திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து புதிதாக உதயமாகவுள்ள தென்காசி மாவட்டத்தில் எந்தெந்த வட்டங்கள் பகுதிகள் சேர்க்கலாம் என்ற மக்களின் கருத்தறியும் கூட்டங்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலும், பராசக்தி கல்லூரி, குற்றாலத்தில் இன்று (17-8-2019)நடந்தது. பெரும்பாலும் சங்கரன்கோவில், திருவேங்கடம் வட்டங்கள் உள்ளடங்கிய சங்கரன்கோவில் தொகுதி திருநெல்வேலி மாவட்டத்தினோடே இருக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கருத்தாகும். சங்கரன்கோவில் புதிய பார்வை சிதம்பரம் கையால் வரைந்த வரைபடத்தில் தெற்கே அம்பையிலிருந்து வடக்கே வாசுதேவநல்லூர் வரை ஒரு நேர்கோடு வரைந்து அதில் மேற்குப் பகுதியை புதிதாக அமையவுள்ள தென்காசி மாவட்டத்திலும், ஏனைய கீழ் பகுதிகள் சங்கரன்கோவில்,திருவேங்கடம் பகுதிகள் திருநெல்வேலி மாவட்டத்திலேயே இருக்கிற நிலையில் சேர்க்கப்பட வேண்டும்.இது எல்லா வகையிலும் நன்மையை தரும .இது புவியியல் ரீதியாக ஏற்றுக் கொள்ளவேண்டியது. திருநெல்வேலிதான போக்குவரத்து வசதியும் இப்பகுதிக்கு ஏற்றது.இரவு நேரங்களில் திருநெல்வேலி போன்று தென்காசியிலிருந்து பஸ் வசதிகளும் இல்லை.
ஏற்கனவே திருவேங்கடம் வட்டாரத்தில் சில கிராமங்களான நடுவப்பட்டியிலிருந்து அய்யனேரி, அப்பனேரி வரை ஏறத்தாழ 14 பஞ்சாயத்துகள் தூத்துக்குடி மாவட்டத்தில் சேர்க்கப்பட்டு சேர்ந்தும் சேராமலும் சிக்கலும் முடிவுக்கு வராமலே உள்ளது. 

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
17-08-2019

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...