Monday, December 9, 2019

#சில_கருத்து_கந்தசாமிகளும், #சில_பரபரப்பு_அறிக்கைகளும்!



————————————————
தமிழகச் சூழலில் செய்தி ஊடகங்களில் அடிக்கடி நீங்கள் பார்க்கலாம்.
திடீர் திடீரென்று சில கருத்துக் கந்தசாமிகள் தோன்றுவார்கள். அதிரடியாகவும், பரபரப்பாகவும் சில கருத்துக்களை உதிர்த்துவிட்டுப் போவார்கள். அதே மாதிரியே சிலர் எழுதிவிட்டுப் போவார்கள்.
சாதாரணமாகப் பார்ப்பவர்களுக்கு இத்தகைய கருத்து கந்தசாமிகளின் பின்புலம் தெரியாது. அவர்கள் கடந்த காலத்தில்என்னசெய்துகொண்டி
ருந்தார்கள் என்பதும் தெரியாது.
இப்படி இன்றைக்கு ஏதாவது ஒரு கருத்தை வலியுறுத்தி ஆக்ரோஷமாகவும், பரபரப்பாகவும் பேசுகிறவர்களில் சில முன்னாள் நீதிபதிகளும் அடக்கம்.
இப்போது மனித உரிமை பற்றியெல்லாம் பேசுகிற அவர்கள் வழக்கறிஞர்களாக இருந்தபோது எப்படியிருந்தார்கள்? பொதுநலன் சார்ந்த பிரச்சினைகளில் அவர்கள் அக்கறை எடுத்துக் கொண்டார்களா? முன்னாள் நீதிபதிகள்
தாங்கள் பதவில் இருந்ந பொழுது இப்படியான மக்களை,நாட்டை பாதிக்கும் பிரச்சனைகளை தன்னிச்சையாக ( சுவ மோட்டவாக) வழக்காக எடுத்து விசாரித்தாரகளா?
இல்லையே. அதிகாரம், வாய்ப்பு இருந்தும் சிந்திக்காத இவர்கள் கடுமையாக கருத்துக்களை பதிவு செய்வதில் என்ன அர்த்தம் உள்ளது?

மனித உரிமை சார்ந்த விஷயங்களில் அவர்கள் எடுத்துக்கொண்ட அக்கறை எப்படி இருந்தது என்பதை நான் நேரடியாகவே உணர்ந்திருக்கிறேன்.

முன்பு நீதிபதியான தார்குண்டே (டில்லி)மதுரையில் காவல்துறையினரால் 1980களில்  எம்ஜிஆர் ஆட்சியில் தாக்கப்பட்டார். அதைக் கண்டித்து சென்னை மாங்கொல்லையில் கண்டனக் கூட்டம் ஒன்றை நடத்தினோம். அதில் கலந்து கொள்வதைத் தவிர்த்தவர்களை எனக்குத் தெரியும். 
அம்மாதிரிப் பல மனித உரிமை சார்ந்த பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்காமல் ஒதுங்கிக் கொண்டவர்களும், தாங்கள் நீதிபதியாக இருந்தபோது, அம்மாதிரியான பிரச்சினை தன்னிச்சையான வழக்காக எடுத்துக் கொண்டு தீர்க்க முன்வராதவர்களும் தான் தற்போது அறிக்கை விடுகிறார்கள். திடீர் என்று உரிமைப் போராளிகளாக அவதாரம் எடுத்தவர்களைப் போலப் பேசுகிறார்கள்.இப்படி சில நேரங்களில
சிலமனிதர்கள்.... இதில் என் முன்னாள்
உதவியளார் ஒருவர் கருத்து சொல்வதை பார்த்து
வேடிக்கையாக கடக்கிறேன்.
ஆனால் இவர்களுடைய அறிக்கைகளையும், பேச்சுகளையும் எவ்வளவு தூரம் அக்கறையுடன் கவனிப்பார்கள்? அல்லது மக்கள் தான் எவ்வளவுதூரம் கூர்ந்து கவனிப்பார்கள்?
அவர்கள் சொல்வதில் அவர்களுக்கே உண்மையான அக்கறை இருந்தால் தானே மற்றவர்களுக்கு அவர்கள் சொல்கிற பிரச்சினைகளில் அக்கறை இருக்கும்? இதில் மக்கள் நலன், பொதுப்
பிரச்சசனையில் அக்கறையைவிட இவர்களின் ஊடக வெளிச்சம், சுயவிளம்பரம், இவர்களின் இருத்தலை நிலை நாட்டல்தான் முக்கிய நோக்கம்.
வேறுன்றும் இல்லை.....
வினை சரியாக இருந்தால் தானே எதிர்வினையும் சரியாக இருக்கும்?
இதை எல்லாம் பார்த்து கடந்து வந்துள்ளேன்......

#KSRadhakrishnanPostings 
#KSRPostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
09-12-2019.

No comments:

Post a Comment

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*. Learn that the simplest of times brings the grandest of pleasures ...