Wednesday, December 25, 2019

நாங்குநேரி, முடிஞ்சிப்பட்டி #எம்_ஜி_சங்கர_ரெட்டியார்

#

 ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு முக்கிய புள்ளியாக திகழ்ந்தார்.
விடுதலைப் போராட்டம், 1952 முதல் 1962 வரை நாடாளுமன்றத்தின் மாநிலங்கள் உறுப்பினராக இருந்தவர். என்னுடைய தந்தையாருக்கு நெருக்கமாகஇருந்தவர்.நான்குநேரியில் இன்றைக்கு கம்பீரமாக காஷ்மீர் -கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் இருக்கின்ற சங்கர ரெட்டியார் மேல்நிலைப் பள்ளியை துவங்கியவர். அதேபோல் அவருடைய சொந்த ஊர் முடிஞ்சிப்பட்டியிலும் இதேபோல மேல்நிலைப்பள்ளி துவக்கப்பட்டது.



திருநெல்வேலி ரத்னா தியேட்டர் இவருடைய குடும்பத்தை சார்ந்தது.
எல்லோராலும் போற்றப்பட்டவர். நல்ல மாமனிதர். இன்றைக்கு இப்படிப்பட்ட மனிதர்கள் பலருக்கு கவனத்தில் படாது நினைவுக்கும் வராது. அதுதான் இன்றைய வணிக அரசியல். அன்றைக்கு தன்னுடைய கையில் இருந்து பணத்தை செலவு செய்தவர்கள் அரசியல் பெருந்தகைகள். இன்றைக்கு நிலைமை தான் நமக்கு தெரியுமே சந்தை அரசியலில்.....
#ksrpost
25-12-2019.

No comments:

Post a Comment

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*. Learn that the simplest of times brings the grandest of pleasures ...