Friday, January 22, 2021

———————————————————
இன்று உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் நினைவு நாள். ஒரு விஷயத்தை அவசியமாக இந்த நேரத்தில் சொல்லி ஆக வேண்டும். 1981-82 கால கட்டத்தில் தமிழகத்தில் நாராயணசாமி நாயுடு தலைமையில் விவசாயிகள் தீவிரமாக போராடிய காலத்தில், பிரதமர் இந்திரா காந்தி அவருடைய சொந்த ஊரான வையம்பாளையம் கிராமத்துக்கு வந்து அவரை சந்தித்தார். அதுபோலவே அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரும், அவருடைய வீடு இருக்கும் வையம்பாளையம் சென்று சந்திக்க முயற்சி செய்தார்.
அன்றைக்கு நான் திமுகவில் இல்லை. அரசியலில் நெடுமாறனோடு பயணித்த காலம். அந்த காலகட்டத்தில், ஒரு நாள் காலையில், 75159 என்ற என் பயன்பாட்டிற்கு இருந்த தொலைப்பேசியில் கலைஞர் என்னை அழைத்து, நாராயணசாமி நாயுடுவை, அவரின் இல்லத்துக்கு சென்று பார்க்க வேண்டும். அவருக்கு நீ நெருங்கியவர் என்று கேள்விபட்டேன். அவரை சந்திக்க ஏற்பாடு செய்ய முடியுமா என்றும் கோவைக்கு வந்துவிடுகிறேன் என்றும் கலைஞர் என்னிடம் கேட்டார்.


கலைஞர் நெடுமாறன், கி.,வீரமணி, அய்யணன் அம்பலம் ஆகியோர் இணைந்து டெசோ ஆரம்பிப்பதற்கான முன்பான காலம் அது. நான் உடனே கலைஞரிடம், சென்னைக்கு நாயுடு வரும்போது உங்களை சந்திக்க அழைத்து வருகிறேன் என்று சொன்னேன். அது உன்னால் முடியுமாப்பா என்றார் கலைஞர். முயற்சிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, சொன்னபடி நாயுடுவை அழைத்துக் கொண்டு கலைஞரை சந்திக்க சென்றேன். ரொம்ப நல்ல காரியம் செய்தாய் என்று கலைஞர் என்னிடம் மகிழ்ந்து கூறினார். இன்றைக்கு இதெல்லாம் யாருக்கு தெரியபோகின்றது.தெரியவில்லையென்றாலும், வரலாற்று செய்திகளை பதிவு செய்யவேண்டுமல்லவா.அன்றையவர்
களில் துரை முருகன் போன்ற சிலர் மட்டும் திமுகவில் ஆக்ட்வாக தற்போது உள்ளனர்.சிலரின் புரிதலுக்கு இந்த செய்தி.
கலைஞரை சந்தித்த பின்பு, கல்கி ப்ரியனுக்கு, கல்கி இதழுக்காக பேட்டியும் அளித்தார். அந்த பேட்டியில், கலைஞரை பற்றி, நாராயணசாமி நாயுடு சிலாகித்திருந்தார்.
நாராயணசாமிநாயுடு
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
22-12-2020.

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...