Monday, February 6, 2023

பரபரப்பான உச்சநீதிமன்றம்

#பரபரப்பான உச்சநீதிமன்றம்
—————————————
நம்நாட்டின் உச்ச நீதிமன்றம் 73 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. 
வழக்குகள் குவிந்துவிடாமல் இருக்க 1980 ஆம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 
கடந்த 3 மாதங்களில் உச்ச நீதிமன்றத்தில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 12, 108.இவ்வளவு வழக்குகளையும் விசாரணை செய்து எப்படி முடித்து வைப்பது என்று யோசிக்காமல்   உச்ச நீதிமன்றம் செயல்பட்டதால், கடந்த 3 மாதங்களில் 12 ஆயிரத்து 471 வழக்குகளை முடித்து வைத்துள்ளது.

இதுகுறித்து சிங்கப்பூர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுரேஷ்மேனன் பேசும்போது, உலகிலேயே மிகவும் பரபரப்பானது இந்திய உச்சநீதிமன்றம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
பாரம்பரிய நடைமுறைகளை மட்டும் கடைப்பிடிக்கக் கூடாது. புதிய வழிகளுக்கு மாற வேண்டும். மாறிவரும் தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொள்ள அவ்வப்போது நீதித்துறையினர் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

#உச்ச_நீதிமன்றம்_73 
#KSR_Post
6-2-2023.


No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...