Thursday, February 23, 2023

வேலுப்பிள்ளை பிரபாகரன் எத்தனை முறைகொல்லப்பட்டார்… முன் வந்தசெய்திகள் பட்டியலைப்பாருங்கள்

வேலுப்பிள்ளை பிரபாகரன் எத்தனை முறைகொல்லப்பட்டார்… 

முன் வந்தசெய்திகள் பட்டியலைப் பாருங்கள்….
—————————————
• சிங்கள ராணுவத்தால் 05 செப்டம்பர் 1984 – இல் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற பொய்யான தகவல் சொல்லப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அவர் தமிழகத்தில் இருந்தார். 
• பிரபாகரனுக்கும் மாத்தையாவுக்கும் ஏற்பட்ட சண்டையில் 1989 ஜூலை 25 ஆம் தேதி பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று சிங்கள அரசு கூறியது. பொம்மை முதலமைச்சரான வரதராஜப் பெருமாளும் இதை உண்மையென்று சொன்னார்.

• சுனாமி ஏற்பட்ட 2004 டிசம்பர் 24 ஆம் தேதி கடலில் மூழ்கி பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தியை சிங்கள அரசு பரப்பியது. அதற்கு அடுத்த நாள் நார்வே நாட்டு வெளிவிவகார அமைச்சர் பிரபாகரனைச் சந்தித்த படம் செய்தித்தாள்களில் வெளி வந்து அந்த தவறான செய்திக்குப் பதிலாக அமைந்தது. 

• விமானப்படை தாக்குதலில் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று 2007 டிசம்பர் 15 ஆம் தேதி சிங்கள அரசு கூறியது. அதுவும் பிழையாகிப் போய்விட்டது. 

• இறுதியில் முள்ளிவாய்க்காலில் 2009 மே 18 - ஆம் தேதி அவர் உடல் கிடைத்ததாகவும், கருணா பிரபாகரன்தான் என்று அடையாளம் காட்டியதாகவும் சிங்கள அரசு உறுதிப்படுத்தியது. இதை ராணுவ அதிகாரி உதயநாணயக்கார கொல்ல பட்டது பிரபாகரன் இல்லையென்று முதலில் கூறிவிட்டு சிங்கள அரசின் வற்புறுத்தலால், அவர் பின்னர் மாற்றிச் சொன்னதும் உண்டு. 

பிரபாகரன் இறந்திருந்தால், பிரபாகரன் இறந்ததாகச் சொல்லப்படும் இறந்த இடத்திலிருந்து, அவர் உடலைக் கைப்பற்றிய இடத்திலிருந்து எடுக்கப்பட்ட எந்த காட்சிகளும் எந்த தொலைக்காட்சியிலும் காட்டப்படவும் இல்லை. அது குறித்தான தரவுகளும் இல்லை. அப்படி உண்மை என்றால் ராஜ பக்சே உடனே கொழும்புக்கு எடுத்து சென்று சர்வதேச பத்திரிகையாளர் முன் வைத்திருப்பார்.

மரபணு சோதனைக்கு 11 மணிக்கு அனுப்பப்பட்டு, 12.15 மணியளவில் அன்றே மரபணு சோதனையில் பிரபாகரன்தான் என்று 1 மணி நேரத்தில் உறுதி செய்ததுதான் வேடிக்கை. மரபணு பரிசோதனை முடிவு தெரிய குறைந்தபட்சம் ஒரு வாரமாவது ஆகும். 
மே 17 ஆம் தேதி கொல்லப்பட்டார் என்றும் சொல்லப்பட்டது.
மேலே குறிப்பிட்ட உதய நாணயக்கார கொல்லப்பட்டது பிரபாகரன் இல்லை என்பதை ராய்ட்டர் செய்தியில் குறிப்பிட்டதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 2009 மே 17 ஆம் தேதி கொல்லப்பட்ட பிரபாகரனின் உடல் 2009 மே 18 ஆம் தேதி முள்ளிவாய்க்காலின் வடபுலத்தில் உள்ள ஆம்புலன்ஸ் கைப்பற்றியதாகவும்  சிங்கள அரசு கூறியது. ஆம்புலன்ஸில் இருந்து துப்பாக்கியால் சுட்டார்கள். சிங்கள ராணுவமும் ஆம்புலன்ஸை நோக்கிச் சுட்டது என்றும் ஆம்புலன்ஸ் பின்பு அமைதியாகக் காட்சி தந்தது என்றும் அங்கே சென்று பார்த்தபோது பிரபாகரன் உடல் இருந்ததாகவும் குழப்பான செய்திகள்தாம் அன்றைக்கு வந்தன. 

ஒரு சிலர் பிரபாகரனின் உடலை எரித்துவிட்டு சாம்பலையும் கடலில் போட்டுவிட்டோம் என்றார்கள். இப்படியான பல செய்திகள்.

இறப்புச் சான்றிதழ், டிஎன்ஏ சான்றிதழ், சிங்கள அரசின் அதிகாரப்பூர்வமான வெள்ளை அறிக்கையை இலங்கை நாடாளுமன்றத்தில் வைத்து விவாதிக்கப்படாதது எல்லாவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  
‘பிரபாகரன் கொல்லப்பட்டார்’ என்ற தலைப்பில் வெளிவந்த செய்தியை அவரே செய்தித்தாளில் படிப்பதைப் போன்ற காட்சிகளும் கடந்த காலத்தில் இடம் பெற்றன. 

இவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு.

#KSR_Post
#கேஎஸ்ஆர்
23-2-2023.

No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...