Sunday, February 5, 2023

#முல்லை பெரியாறு அணை

#முல்லை பெரியாறு அணை
————————————————————
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை, தமிழக நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ளது. இந்த அணையின் பராமரிப்பு பணிகளைச் செய்வதற்காக, நான்கு மினி லாரிகளில் சில நாட்களுக்கு முன்பு ஜல்லி கற்கள், மணல், சிமெண்ட் போன்றவற்றை வல்லக்கடவு வனப்பாதை வழியாகக் கொண்டு சென்றனர். 

மினி லாரி ஓட்டுநர்களுடன், அவர்களுக்குத் துணையாக மூன்று லோடுமேன்கள் தடையை மீறிச் சென்றதாக கேரள காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆபத்தான வனப்பகுதியில் செல்லும்போது ஓட்டுநர்களுக்குத் துணையாக லோடு மேன்கள் செல்வது அவசியம் என்ற நிலையில், கேரள காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு தமிழக விவசாயிகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. போராட்டம் மேற்கொள்ளப் போவதாகவும் அறிவித்துள்ளது. 

முல்லைப் பெரியாறு அணையை நம்பி ஒரு கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் இருப்பதாகவும், 10 லட்சம் விவசாயிகளின் வாழ்க்கை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள விவசாயிகள் சங்கம், அணையின் கட்டுப்பாடு முழுவதையும் தமிழக நீர்வளத்துறை எடுத்துக் கொள்வதற்கான பணிகளில் இறங்க வேண்டும் என்றும், அணையில் உள்ள கேரள மாநில காவல்துறையினரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.

#முல்லை_பெரியாறு_அணை
#KSR_Post
5-2-2023.

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...