Monday, December 11, 2023

டிசம்பர் 10 மனித உரிமை நாள்

டிசம்பர் 10 மனித உரிமை நாள் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த மனித உரிமை நாள் பற்றி 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் புத்தகங்கள் பல நான் எழுதி அது வெளியாகி இருக்கிறது.
மனித உரிமை நாள் கூட்டங்களையும் நான் தொடர்ந்து நடத்திருக்கிறேன்.

ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் எனது வழக்காக முறையிட்டு அதைக் கண்டித்த மனித உரிமை போராட்டங்களும் இருந்தன.

2001 நள்ளிரவில் கலைஞர் கைது செய்யப்பட்ட போது அதை நீதி பதிகளிடம் அவ்விரவே கொண்டு சென்று முறையிட்டேன்.

இன்றைய முதல்வர் ஸ்டாலின் வேளச்சேரி வீட்டில் முற் காலத்தில் நடந்த போலீஸ் அத்துமீறிய விவகாரத்திலும் தலையிட்டு எக்காலத்திலும் அவர் வீட்டின் மீது சோதனை நடத்தக் கூடாது என்பதற்கு தடை வாங்கியவனும் நான். முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்களை 22 ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் துறையிலிருந்து வந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது அப்போதெல்லாம் இந்த மனித உரிமை ஆணையத்தின் செயல் பாடுகள் இல்லாத காலம் . அந்த நேரத்திலும் 
அப்படி அழைத்துச் செல்ல காவல்துறைக்கு உரிமை இல்லை என்று  போராடியிருக்கிறேன்.

டெல்லி மனித உரிமை ஆணையத்திலும் சென்னை மாநில மனித உரிமை ஆணையத்திலும் ஏறத்தாழ 30 40 மனித உரிமைப் பிரச்சனைகளை வழக்குகளை எடுத்துச் சென்று அதற்கு நீதி கேட்டு அதை வாங்கி கொடுத்தவன் என்கிற முறையில் இந்த மனித உரிமை பிரச்சினைகளில் தொடர்ந்து செயலாற்றி வந்ததை  இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்.

வீரப்பன் தேடுதல் வேட்டையில் நடந்த மனித உரிமை மீறல்கள் என பல.. 

இந்தியா முழுக்கவும் எல்லா மாநிலங்களும் இந்த மனித உரிமை ஆணையம் இருப்பது மிகச் சிறந்த ஒரு கொடுப்பினை அது முக்கியமான நேரங்களில் சட்டத்தின் அத்துமீறல்களையோ காவல்துறையின் பொய் வழக்குகளிலோ அரசியல் நோக்கபூர்வமாகவோ இல்லை ஏதேனும் பல காரணங்களுக்காக தனிநபர் உரிமைகளை அவை எந்த விதத்திலும் பாதிக்க கூடாது என்பதற்கு தான்  இந்த மனித உரிமை ஆணையம் முக்கியத்துவம் கொடுக்கிறது .

உலக அளவில் ஆண்டு தோறும் கூடும் ஜெனிவா மாநாட்டில் மனித உரிமை விவகாரங்கள் இன்று வரை காத்திரமாக பேசப்பட்டு வருகின்றன. 800 கோடிக்கு மேல் மக்கள் தொகை பெருகிவிட்ட பூமியில் பல நாடுகளில் சேர்ந்த ஒரு ஒன்றரை லட்சம் பேர் தான் அங்கே ஒன்று கூடி  ஐநா சபை வரை மனித உரிமை விவகாரங்களைக் கொண்டு செல்வதில் போராடி வருகிறார்கள் என்பது மிகவும் துயரமான ஒரு விஷயம். அது குறித்த விழிப்புணர்வு இன்னமும் மக்களிடையே கொண்டு செல்லப்படவில்லை. ஈழத்தமிழர் விவகாரத்தில் நடந்த மனித உரிமை அத்துமீறல்கள் பத்திரிக்கையாளர் படுகொலைகள் தேசியஇனப்படுகொலைகள் யாவற்றையும் குறித்த வழக்குகள் இன்னும் ஐநா சபையில் உலக நீதிமன்றங்களில் நிலுவையிலிருந்து கொண்டுதான் இருக்கிறது.

என் வாழ்வும் இந்த மனித உரிமை ஆணையமும் பல நேரங்களில் பல வழக்குகளில் இணைந்து செயல்பட்டிருது என்பதை ஆழ்ந்து யோசிக்கும் போது  மனதில் எதோ ஒருவகையான திருப்தி ஏற்படுகிறது.  உண்மையில் மனித உரிமை ஆணையம்   மக்களுக்கு ஒரு ஆபத்பாந்தவன் . அதை மனதில் கொண்டு ஆண்டுதோறும் டிசம்பர் 10 ஆம் தேதி  அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இளைஞர்கள் முன் வர வேண்டும் . 
இன்று இந்நாளில் வேண்டிக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...