Saturday, December 23, 2023

மார்கழி- முன் பனிக்காலம்- பாவை நோன்பு- ஆண்டாள்- திருப்பாவை

பனி பொழியும் மார்கழியில்,,
பாவை நோன்பிருக்க சூடிக் கொடுத்த சுடர்க்கொடி 
கோதை நாச்சியார் எனும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள்,,
அரங்கனை,,
அனந்தனை,,
கண்ணனை,,
மாயனை,,
வடமதுரை மன்னை  வணங்குவதற்காக,,பாவையரை எழுப்புவதற்காக பாவை பாடுகிறாள் !
எனில்,,
அது,,
திருப்பாவை !

பாவைகள்,,
எல்லாம்,,கோதையுடன் வருகின்றன வேளையில்,,
மாமாயன் மட்டும் துயில் கொண்டிருந்தால்,,,?
அவனும்,,எழுந்திருக்க வேண்டாமா ?
ஆதலின்,,
மாயனின்,,
தந்தையான,,
நந்தகோபர் தன் பிள்ளையை எழுப்புவதாக,,, பாடல்
மார்கழி நாளொன்று !

அன்னையவள் அழைக்கின்றாள் ! எழும்பிள்ளாய் !
பின்னைவந்து துயிலும் மனப்போக்கு விட்டெழுவாய்
கன்றுவந்து முட்டும் பால் வேண்டி தாய்மடியின் காலை
கன்னிவந்து முட்டும் கனவுறக்கம் கலைத்தெழுவாய்
மண்ணில் கதிரொளிக்க காலை வெளுக்குமுன்னே
கண்ணில் துயிலுறக்கம் கலைத்து நீயெழுவாய்
முன்னில் செய்தவினை நூறு உனைத் துரத்துமுன் தமிழ்
பண்ணில் பா நெய்து கோவின் கழலடி சேர்த்திடவே எழும் பிள்ளாய் 


https://chanakyaa.in/articles/read/86

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...