Thursday, December 21, 2023

#முதல்வர் ஸ்டாலின் அவர்களே…. இது என்ன நியாயம் ⁉️ சொல்லுங்க…. #திடீர் பணக்கார போல திமுகவுக்கு வரும் திடீர் நபர்கள் பலர் ,

#முதல்வர் ஸ்டாலின் 
அவர்களே….
இது என்ன நியாயம் ⁉️ சொல்லுங்க….
#திடீர் பணக்கார போல திமுகவுக்கு வரும் திடீர் நபர்கள் பலர் ,

————————————
திமுக தலைவரும் இன்றைய தமிழ்நாட்டின் முதலமைச்சரும் ஆன திரு மு க ஸ்டாலின் அவர்களிடம் தொடர்ந்து பல நாட்களாக பொதுவெளியில் கேள்விகளை வைத்துக் கொண்டே வருகிறேன்.
அதை அவர் கவனிக்கிறாரோ இல்லையோ என் மனதில் பட்டதை நான் மிக நேர்மையாக ஆரோக்கியமான விமர்சனம் பூர்வமாக முன் வைப்பது என்பது அரசு மீதுள்ள மரியாதையாலும் மக்கள் நலன்களின் மீது அக்கறை உள்ளதாலும் மட்டுமே.

ஈழப் பிரச்சனையில் காங்கிரஸ் ஆட்சியில் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்  போன்று மல்லிகா அர்ஜுன் கார்கே  சோனியா குடும்ப உத்தரவகளை ஏற்கும் நிலைப்பாடுதான் என பொருள் வரும் வகையில் நான் ட்விட்டரில் எழுதிய ஒரு விமர்சன பதிவுக்கு என்னை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்திருக்கிறார்கள்.  இன்று வரை அதில் நான் இருக்கிறேனா இல்லையா என்று கூட அவர்கள் 
 பொதுவெளியில்  விளக்கம் தருவதில்லை .காங்கிரஸ் கட்சி யோடு கூட்டணியாக இருக்கும் நிலையில் நான் செய்த விமர்சனம் ஒரு இடைஞ்சல் என்று திமுக சார்பிலான முதல்வர் நினைக்கிறார் ஆனால் எக்காலத்திலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் 
இடையே ஈழத்தமிழர் பிரச்சினையில் ஒரு உள் முரண்பாடு இருந்து கொண்டிருப்பதை அவர் உணருகிறாரோ இல்லையோ என்பது எனக்கு தெரியாது .நான் அதை உணர்கிறேன். இருக்கட்டும்

இன்றைக்கு வந்திருக்கும் 24 
.12 .2023 ஜூனியர் விகடன் இதழில்
தர்மபுரியை சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தனது பேட்டியில் கடந்த  மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் ஜெயித்திருந்தால் அவர்களின் தலைக்கனம் கூடி போயிருக்கும் என்று கூறுகிறார்.

இது   கூட்டணியை பொறுத்தவரையில் மோசமான விமர்சனம் இல்லையா. ஈழத் தமிழர் போன்ற உணர்ச்சிகரமான விவாகரத்தில் எனது விமர்சனம் அதன் நியாயத்தை நான் எடுத்துக் கூறிய போது தவறாகப்பட்டது.இன்று உங்களது நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரசை இந்திய அளவில் ஜெயிக்கும் படி விடுவது அவர்களுக்கு தலைக்கனத்தை ஏற்படுத்தி விடும் என்று சொல்கிறார்.

இந்த நேரத்தில் நான் நினைத்துப் பார்க்கிறேன் . இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களின் கடந்த கால விவகாரங்களில்….
 பிறகு ஜெயலலிதாஆட்சியி்ல், கொடுத்த வழக்கின் பேரில் அன்று  உங்கள் பழைய வேளச்சேரி வீட்டில் வந்து காவல்துறையினர் கைது நடவடிக்கை எடுத்த போது; இனி ஒருபோதும் இது மாதிரியான  நடவடிக்கைகள்  ஸ்டாலின் வீட்டில் எடுக்கக் கூடாது என்று SHRCயில் தங்கள் மனைவியை நான் அழைத்து சென்று  காவல் துறைக்கு எதிராக தடை உத்தரவு வாங்கிய நாட்களும் உங்களுக்கும் நினைவராமல் போவது கொஞ்சம் புத்திசாலித்தனமானது தான். ஜெயலலிதா வழக்கு கர்நாடக மாநிலத்துக்கு  மாற்றத்தின் போது ஆற்றிய பணிகள், கலைஞர் நள்ளிரவு கைது மற்றும் அதன் காட்சிகள்
சன் தொலைகாட்சியில் காட்டிவும் அந்த கேசட்டை  நான்  அன்று இரவு ரகசியமாக கடத்தி செல்லவில்லை என்றால் உலகம் 
கலைஞர் கைதை பார்த்து கண்ணீர் வடித்து இருக்குமா? முள்ளிவாய்கால் கொடுமை, டெசோ நான் ஆற்றிய முக்கிய பணிகள் உங்களுக்கு நினைவு உள்ளதா?

இதே மாதிரி தான் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் சொன்ன குற்றசாட்டை உண்மை தன்மை என்ன என தங்களிடம் ஆட்சி இருந்தும் நீங்கள அறியவில்லை.

இப்படி திமுகவுக்கு பணி செய்த என்னை 
இடை நீக்கம். நேற்று வரை திமுகவை
திட்டியவர்களை சேர்த்து உழைப்பு இல்லதவர்கள்களுக்கும மந்திரி, எம்பி, எம்எல்ஏ பதவிகளை எளிதாக எப்படி உங்களால் அள்ளி கொடுக்கமுடிகிறது. தர்மபுரி செந்தில் குமார் எப்போது திமுகவுக்கு வந்தார்? இப்படி பலர் திமுகவில் உங்களால் ஏற்றம் பெற்றனர்.

காங்கிரசுக்கு விரோதமாக இருந்தேன் என்று என்னை இன்று நீங்கள் தள்ளி வைத்து பார்க்கும் பார்வை ஏன் உங்கள் கட்சியில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அதையே சொல்லும் போது அந்தப் பார்வை செயலற்றுப் போகிறது.

ஆக திடீர் பணக்கார போல திமுகவுக்குவரும் திடீர் நபர்கள் பலர், தன்னை நம்பி விசுவாசம் ஆகி ஜால்ரா அடித்து தன் காரியங்களை சாதித்துக் கொள்பவர்கள் எதை சொன்னாலும் உங்களுக்கு அவர்கள் மீது குற்றம் ஏதுமில்லை ஆனால் உண்மையை நிலவரத்தை சரியான முறையில் ஒரு கட்சியின் மாண்பு கருதி அதனுடைய இயக்கத்தை கருதி அதற்கு அறிவுரையோ அல்லது அதற்கான நீதிகளையோ என்னை போன்றவர்கள் எடுத்துச் சொல்லும் போது மட்டும் அவர்களை  ஆகாதவர்கள் தள்ளி வைத்து விடுவது என்பது உங்கள் வழக்கம் எனில் எனக்கு அது குறித்து எந்தக் கவலையும் இல்லை. நான் எப்பொழுதும் போல என்னுடைய அரசியல் பணியில் முன்பு உங்களோடு இருந்த போதெல்லாம் எவ்வளவு தீவிரமாக இருந்தேனோ அதே நிலையில் தான் இப்பொழுதும் இருக்கிறேன். அரசின் சரியான நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவிப்பதை விட அதன் தவறான போக்குகளை சுட்டிக்காட்டுவது எனது வழக்கம் . அப்படியான சந்தர்ப்பங்கள் இருக்கும் போது கூட நான் அதில் தலையிட்டு ஒரு பாதுகாப்பான நிலைக்கு  உதவியிருக்கிறேன் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள். காலம் கைப்புண்ணுக்கு மருந்து அளிக்கலாம். ஆனால் தொடர் நிகழ்வுகள் எப்பொழுதும் உண்மையான எதார்த்தங்களின் மீது தான் நிகழும்.

அலைகளைச் சொல்லி பிரயோஜனமில்லை
கடல் இருக்கும் வரை
இருப்பதற்கு என்று தான் வருகிறோம் 
இல்லாமல் போகிறோம்.
-#நகுலன்

#திமுகவுக்கு_வரும்_திடீர்நபர்கள்
#திமுக #dmk #Stalin #ஸடாலின்
#DMKFailsTN

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
21-12-2023.


No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...