Wednesday, December 13, 2023

“*நாம் யாரை மனதார நேசிக்க விரும்புகிறோமோ அவரைப் பற்றி முழுதாக அறிய முயலவேண்டும்*.

“*நாம் யாரை மனதார நேசிக்க விரும்புகிறோமோ அவரைப் பற்றி முழுதாக அறிய முயலவேண்டும்*.அவர்களது தேவைகளையும் பேரார்வங்களையும் துயரங்களையும் புரிந்துகொள்வதற்கு அவர்களை உற்றறிந்து ஆழ்ந்து கற்க வேண்டும். ஒருவரைக் குறித்து முழுமையாக அறிந்து புரிதல் ஏற்பட்ட பிறகு அவர்களைக் காதலிக்காமல் இருக்க முடியாது. 

அவ்வப்போது, நீங்கள் காதலிக்கிறவர் அருகே அமர்ந்து, கையோடு கை கோர்த்து, ‘ஆரூயிரே, நான் உன்னைப் போதுமான அளவுக்குப் புரிந்துகொண்டிருக்கிறேனா? ஏதேனும் ஒரு விதத்தில் உன்னைக் காயப்படுத்துகிறேனா? தயவுசெய்து உண்மையைச் சொல். உன்னைச் சரியான முறையில் காதலிப்பதற்கு நான் கற்றுக்கொள்வேன். எனது தவறுகளைத் திருத்திக்கொள்வேன். என்னுடைய அறியாமையால் நீ வருந்தக்கூடாது. தயவுசெய்து சொல். மேலும் பண்பட்ட முறையில் உன்னைக் காதலிப்பேன். இந்த உறவில் மகிழ்ச்சி மட்டும் நிலைத்திருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்’ என்று சொல்லுங்கள். நீங்கள் திறந்த மனத்துடன் இதைக் கூறும்போது உங்களது இணையரது உள்ளம் நெகிழ்ந்து கரையவும் கூடும். 

ஓர் உறவில் புரிதலுக்கான கதவுகள் எப்போதும் திறந்திருப்பது நல்ல அறிகுறியாகும். எந்தச் சிக்கலையும் இதன்மூலம் சீர்செய்ய இயலும். 

இக்கேள்விகளைக் கேட்பதற்கான துணிச்சல் நமக்கிருக்க வேண்டும். இவற்றைக் கேட்காமல் எவ்வளவு காதலித்தாலும் பயனில்லை. நம்மை அறியாமலேயே நமது இணையைத் துன்புறுத்திக்கொண்டும் இருக்கலாம். ஏனெனில், காதல் என்பது அளவற்ற புரிதல்தான். எல்லையில்லாப் புரிதலினால் மட்டுமே நமது இணையிடம் உண்மையான மலர்ச்சியைக் காண முடியும்.”

- *திக் நாட் ஹன்ச்*.


No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...