Thursday, April 18, 2024

*தேர்தல் விளம்பரங்கள் மக்களின் கண்ணை கட்டும் மாயை!!. காட்சிப்பிழைகள்*.

*தேர்தல் விளம்பரங்கள் மக்களின் கண்ணை கட்டும் மாயை!!. காட்சிப்பிழைகள்*.
————————————
இன்றைக்குத் தேர்தல் பிரச்சாரம்  முடிந்து ஏப்ரல்19ஆம் தேதி முழுமைக்கும் மக்கள் வாக்களிக்க இருக்கிறார்கள்.

இன்றைக்கு காலையில் தினசரித்தாள்களைத் திறந்தால் அனைத்திலும் முழு பக்கத் தேர்தல் விளம்பரங்கள். சகட்டு மேனிக்கு வேட்பாளர்கள் சின்னங்கள் என வண்ணங்களில் பத்திரிகைகள் நிரம்பி வழிகின்றன. வேறு செய்திகளுக்கு கொடுக்காத முக்கியத்துவம் இந்தத் தேர்தல் விளம்பரங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த விளம்பரக் கலாச்சாரம் காமராஜர் காலத்திலும் அண்ணா காலத்திலும் கிடையாது. தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த கட்சிகள் ஊர்ச் சுவரில் சின்னம் தீட்டுவதற்கோ சிறு விளம்பரங்கள் செய்வதற்கோ ஆகும் செலவுகளுக்கு  பொதுமக்களிடம் நன்கொடைகள் கூட வாங்கிச் செய்திருக்கிறார்கள்.
அது அந்தக் காலம்.

இப்படி  இன்று முழுப்பக்க அளவில் வந்து கொண்டிருக்கும் விளம்பரங்களுக்கு எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இது ஊழல் பணம். மக்களின் பணம்.மது விற்பனை பணம் என…..

மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் என்றும்
மாணவிகள் கல்வித்தொகை ஆயிரம் என்றும் முதல்வர் திட்டங்களின் கீழ் ஆயிரங்கள் என்றும் வீட்டிற்கு 5000 வரை கொடுக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுக்கிறார்கள்.

மக்களைப் பிச்சைக்காரர்கள் என்று நினைத்து தான் இப்படி எல்லாம் பொய் வாக்குறுதிகளை அள்ளித் தெளிக்கிறார்களா?இல்லை

இப்படி எல்லாம் அள்ளிக் கொடுத்தால் தமிழ்நாடு மிகப் பெரும் கடன்கார நாடாகிவிடாதா?

இப்படிப் பல இலவசங்களை அள்ளிக்கொடுத்த பல மாநிலங்கள் எல்லாம் இப்பொழுது கடனில் சிக்கித் தவிக்கின்றன.

எந்த அடிப்படையில் இவர்கள் இப்படி வாக்குறுதி தருகிறார்கள். நாட்டின் பொருளாதாரப் பின்னணியை ஆராயாமல் இப்படி மக்களை ஏமாற்றி ஓட்டுவாங்குதற்கு என பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசுவது எப்படி முறையாகும்.

எப்படியாவது ஆட்சிக்கு வந்து விட்டால் போதும் இந்த வாக்குறுதிகளை எல்லாம் பின்னர் மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைக்கிறார்கள்.

இலவசம் என்பதை விவசாயம்,கல்வி, சுகாதாரம் மற்றும் மக்கள் வாழ்விடத்தில்  இருக்கிற பொது சேவைகள் சார்ந்துதான் அதுவும் மக்கள் வரிப்பணத்தில் தான் ஒரு அரசு நிறைவேற்ற முடியும்.

அதைவிட்டு இவ்வளவு இலவசங்கள் கொடுக்க இவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது. இது ஒன்றும் அவர்கள் சொந்த வீட்டு பணமல்ல. நம் செலுத்தும் வரிப்பணம்.மக்கள் ஒன்றும் பிச்சைக்காரர்களும் அல்ல. இலவசங்களைக் கொடுத்து விட்டு மக்களை ஏகடியும் பேசுகிற ஆட்சியாக இது இருக்கிறது.

செருப்பு, டிவி,சைக்கிள் என்று இலவசங்களை கொடுத்து விட்டு மக்களிடம் ஓட்டை பெற்று பெரும் கொள்ளைகளில் ஈடுபடுவது குடும்ப சொத்துகளைப் பெருக்கிக் கொள்வது என்பது எப்படி மக்கள் மீது அன்புள்ள நல்லாட்சியாக இருக்க முடியும்.

16/04/2024 

பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த கூட்டம் இது...

பாஜக எழுப்பி இருக்கும் நூறு கேள்விகளும் பொய் என்று திமுக தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. இதுதான் மிகப்பெரிய பொய். 463 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம், மீதியை இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றுவோம் என்று கூறி இருக்கிறார்கள். இந்த 462 வாக்குறுதிகளை நிறைவேற்றியதை, ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிடத் திமுக தயாரா?

வேங்கை வயல் விவகாரம் குறித்து உயர்நீதிமன்றம் தலையிட்டு ஜூலை மூன்றுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறது. சமூக நீதிக் காவலர்களே, அது குறித்து எழுப்பப்பட்ட கேள்வி பொய்யா?

ரூபாய்க்கு மூன்று படியில் தொடங்கி, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் என்று ஏய்க்கும் போக்கு தானே இன்றைக்கும் தொடர்கிறது. கபட நாடகம் ஆடுவது என்பது இவர்களுக்கு கைவந்த கலை.
தமிழகத்தைத்  இவர்களிடம் தந்ததற்கே, தலைமுறைக்கும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இவர்களிடமா இந்தி கூட்டணி எனஇந்தியாவை ஒப்படைக்கப் போகிறோம்? சிந்தித்து செயல்படுவோம்! நிலையான வளர்ச்சி முக்கியம்

இவை  மக்களின் மீது இறையாண்மை உள்ள ஆட்சி இல்லை. ஜனநாயக ரீதியான ஆட்சியும் இல்லை. இது முற்றிலும் வணிக நோக்கம் சார்ந்த தங்களது ஆட்சி அதிகாரத்தால் சுயநலங்களை பெருக்கிக் கொள்ளும் பொருளியல் பாசிசத்தைக் கொண்டதாக இருக்கிறது என்பதைத்தான் அறிவுடையவர்கள் விமர்சனம் செய்வார்கள்.

அப்படி இல்லையெனில் நேர்மையாக இருப்பவர்களுக்கு எதற்கு இப்படியான விளம்பர மோகங்கள். எப்படி மக்கள் வாக்களிக்க தானே போகிறார்கள்.

பொய் வாக்குறுதிகள் ஒரு ஏமாற்று வேலை! விளம்பரங்கள் மக்களின் கண்ணை கட்டும் மாயை!!.

#நாடாளுமன்றதேர்தல்2024
#ParliamentaryElection2024

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
18-4-2024.


No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...