Tuesday, April 16, 2024

வாழ்வின்சுழற்சி #கிராமசூழல்

#வாழ்வின்சுழற்சி
#கிராமசூழல்
————————————
இம்முறை  சித்திரை முதல் நாள் சொந்த ஊரான குருஞ்சாக் குளம் கிராமத்திற்குச் சென்று அங்கே இரண்டு நாட்கள்   தங்கி இருந்தேன். கரிசல் மண் கோடை வெயில். கிராமம் தூத்துக்குடி, விருதநகர், தென்காசி நாடாளுமன்ற தொகுதிகளின் எல்லை பகுதி . தேர்தல் சூடு வேறு

என்னுடன் படித்த என் சக வயது தோழர்கள சிலரை அங்கே சந்திக்க முடிந்தது. அதில் சிலர் பலகாலமாக இந்தியாவின் வடக்கில், வெளி நாட்டில் சென்று வேலை செய்து திரும்பி இருந்தார்கள்.













நன்கு படித்து முன்னேற வேண்டிய ஆட்கள் மிக அதிக அளவு பள்ளியில் மதிப்பெண் எடுத்தவர்களும் கூட.
என்னுடன் படித்த கருத்த பாண்டி மிகச் சிறப்பான மாணவர் நன்கு மதிப்பெண்கள் எடுக்கக் கூடியவர். மிகச்சிறந்த தச்சுஆசாரித் தொழில் பார்த்துக் பார்த்துக்கொண்டு அவர் போக்கில் இருக்கிறார். அவருடன் நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.

போக என்னுடன் பள்ளியில் படித்தவர்கள் அல்லது ஊர் நண்பர்கள் சிலர் அவர்கள் போக்கில் இருக்கிறார்கள் .பலர் இறந்தும் போய் விட்டார்கள். பால்ய நினைவுகளோடு இரண்டு நாள் அவர்களுடன் பல விஷயங்களைப் பேசி கலந்து இருந்து வந்தது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது.




எல்லாவிதமான மனப்பாரங்களையும் இறக்கி வைத்து எளிமையாக  கிராமத்து வெள்ளந்தி மனிதர்களாகப் பல விஷயங்களை பேசிக்கொண்டிருந்தது ஆறுதல் ஆகவும் அமைதியாகவும் இருந்தது.

 என்னுடன் படித்த நண்பர் வெங்கடச்சலம் அக்காலத்தில் எம் எஸ் சி கணிதம் முடித்தவர். பிறகு ராமசுப்பு என்பவர் அவர் வெகு காலம் ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்தார். இப்போது இந்த இருவர் இல்லை. ராமசாமி கேந்திரிய பள்ளியில் ஒய்வு பெற்ற பட்டம் பெற்ற chemistry ஆசிரியர்.இப்படி பலர்…

இப்படிப் பலரும் என்னை பார்க்க வந்தார்கள் மனம் விட்டு அளவளாவினோம். இரண்டு நாள் காலை இரண்டு நாள் இரவு மாலை என அந்த ஏதார்த்த மனிதர்களுடன் களித்தது ஒரு வகையில் நிம்மதியாக இருந்தது.
இப்படியான மனிதர்களுடன்  இங்கேயே திரும்ப கிராமத்து வீட்டில் தங்கி விடலாமா என்று கூட மனதில் தோன்றியது. நல்ல தண்ணீர், நல்ல உணவு,  நல்ல பெரிய வீடு,அமைதி என…. முடியுமா? முடியாது

வாழ்வின் சுழற்சி அதன் கதிகள் போக்குகள் எல்லாவற்றிற்கும் ஒரு விதமான தத்துவ இருப்பு இருக்கிறது.

#வாழ்வின்சுழற்சி
#கிராமசூழல்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
16-4-2024


No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...